சூர்யாவுக்கு ஆதரவா கமல், சீமான் வந்தாச்சு! ரஜினி சார் எங்கேப்பா?

சூர்யாவுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட பாதி சினிமா உலகம் வந்துவிட்டது.


ஏனென்றால், சூர்யா ஏற்கெனவே கல்வித்தளத்தில் இயங்கி வருகிறார். அதனால்தான் சூர்யாவை எல்லோரும் ஆதரிக்கிறார்கள். ஓட்டுப் போட எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்றால், ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை கேள்வி கேட்கவும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. எனவே சூர்யாவுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் கேட்பதற்கு உரிமை இருக்கிறது.

கோடிக்கணக்கான மாணவர்களை எதிர்கால இந்தியாவை பாதிக்கும் விஷயம் கல்வி. அது தரமானதாக, எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்கிற அக்கறையும் சிந்தனையும் நம் எல்லோருக்கும் இருந்தே ஆகவேண்டும். 

எனவே வாயைத் திறக்காதே என்று விதண்டாவாதம் பேசாமல், சரிசமமாக அமர்ந்து பேசுவோம், விவாதிப்போம். அவசரப்படாமல் தரமான சமமான கல்வியை வடிவமைப்போம். மாணவர்களைக் காப்போம் என்று கமல்ஹாசன் கூட வாய் திறந்துவிட்டார்.

இதுகுறித்து, இன்னமும் தன்னுடைய கருத்தைத் தெரிவிக்காதவர் சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டும்தான். பா.ஜ.க. அனுமதி கொடுத்தால்தான் பேசுவாரா என்று அவரது ரசிகர்களே கேள்வி கேட்கிறார்கள். வாருங்கள் ரஜினி... மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுங்கள்.