உத்தமவில்லன் என்று கமல்ஹாசனை திட்டியிருக்கும் ஞானவேல்ராஜா விவகாரம் அடுத்தகட்டத்துக்குப் போயிருக்கிறது. கமல்ஹாசன் இப்படித்தான் கேடுகெட்ட மனிதர் என்று திட்டியிருக்கிறார் அவரது முந்தைய வழக்கறிஞர் ராஜசேகர்.
கமல் ஒரு பொறுக்கி, கமலுக்கு அறிவே இல்லை, கமல் பல குடும்பங்களை அழித்தார்! இப்படியெல்லாம் சொல்றது யாருன்னு தெரியுமா?
உடனடியாக கமல்ஹாசனின் ஆர்மியில் பணியாற்றும் தொல்காப்பியன் ராஜசேகருக்கு ஒரு நீண்ட மடல் எழுதியிருக்கிறார். கமல்ஹாசன்தான் உலகத்திலேயே நம்பர் ஒன் நேர்மையாளர் என்று சொல்லும் அவரது பதிவை படியுங்கள்.
அட்வோகேட் ராஜ சேகர் ஒரு வீடியோ வெளி இட்டு இருக்கிறார். அதில் டாக்டர்.கமல்காசன் அவர்களை இழித்தும் பழித்தும் பேசி இருக்கிறார். குறிப்பாக டாக்டர் கமல்காசன் அவர்களின் சொந்த வாழ்க்கையை விமர்சித்து இருக்கிறார்.ஆனால் அவரை ஏசுவதற்கான காரணம் ஒன்றைக் கூட ராஜசேகர் முன் வைக்க வில்லை? அவர் சொல்லும் ஒரே ஒரு காரணம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் டாக்டர்.கமல்ஹாசன் மீது கொடுத்து இருக்கும் கம்ப்ளைண்ட் மட்டுமே!
எனக்கு இப்படி கேட்கத் தோனுது “ஏண்டா நாயே! அது கம்ப்ளைண்ட்தானேடா? ஒருத்தர் மீது கம்ப்ளைண்ட் பண்ணினாலே அவரை குற்றவாளின்னு முடிவு பண்ணிடுவீயாடா?’’ அப்படீன்னு கேட்கத் தோனுது.
ஏன் எனக்கு அப்படித் தோனுதுன்னா, இந்த ஆளு ஒரு வக்கீல். ஒரு வழக்கை ஒரு வக்கீல் எப்படி அணுக வேணுங்கிற அடிப்படை அறிவு கூட இல்லாம பேசினா எனக்கு அப்படித்தானே தோனும்.. கொலை பண்ணிட்டான்னு ஒருத்தன் மேல குற்றச்சாட்டு வச்சிட்டா உடனே அவனை கொலைகாரன்னு முடிவு செஞ்சிடணும்னு எந்த சட்டம் சொல்லுது? ஒரு முட்டாளாலதான் இப்படி லாஜிக் இல்லாம உளற முடியும்.
தயாரிப்பாளர் சங்கத்துல புகார் கொடுத்த ஞானவேல் ராஜா ஏன் கமிஷனர் ஆஃபீசுல புகார் கொடுக்கல? ஏன்னா, போலீசுக்கு எவிடென்ஸ் வேணும். ‘எப்போ கொடுத்தீங்க? எப்படி கொடுத்தீங்க? ஏன் கொடுத்தீங்க? கமலுக்கு பணம் கொடுத்ததுக்கான என்ன சான்று இருக்கு? பணம் வாங்கிக் கொண்டதற்கான கமலோட கையெழுத்து பத்திரம் எங்கே?
பத்திரம் இல்லாட்டின்னா நீங்க அவருக்கு பணம் கொடுத்தீங்கங்கிறத நாங்க எப்படி நம்புறது?’ ஆதாரத்தைக் குடுங்க. அப்படி இப்படின்னு போலீஸ் எவிடென்ஸ் கேட்டு டிமாண்ட் பண்ணும்.
ஆனா, தயாரிப்பாளர் சங்கத்துல அந்த மாதிரி கெடுபிடி எல்லாம் இருக்காது. அதனாலதான் ஞானவேல் ராஜா போலீசுக்குப் போகாம தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போனார். நடந்தது என்ன?
உத்தம வில்லன் பட நேரத்துல பணப் பற்றாக் குறையால் அவதிப்பட்ட லிங்குசாமி ஞானவேல் ராஜாவிடம் பணம் கேட்டு இருக்கிறார். அவரும் ஒரு நிபந்தனையோட பணம் கொடுத்து இருக்கிறார். அந்த நிபந்தனை என்னன்னா, சூரியாவோட அடுத்தப் பட கால்ஷீட் லிங்கு சாமியிடம் இருந்து இருக்கிறது. சூரியாவின் கால்சீட்டை வைத்து எடுக்கப் போகும் அடுத்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு பண்ணிக் கொடுக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தணை.
மேலும் கமலும் லிங்குசாமிக்கு ஒரு படத்துக்கான கால்ஷீட் தருவதாக் சொல்லி இருந்தார். அந்த படத்தையும் தன்னுடைய நிறுவனமான ஸ்டுடியோ கிரீனுக்கே செய்ய வேண்டும் என்று ஞானவேல் நிபந்தனை விதித்து இருந்தார். அதன் பேரில்தான் ஞானவேல், லிங்குசாமிக்கு பணம் கொடுத்து இருந்தார்.
சூரியாவும் கால்ஷீட் கொடுக்கவில்லை. கமலுடைய கால்ஷீட்டையும் லிங்குசாமி கேட்டுப் பெறவில்லை. படம் எதுவும் எடுக்காமல் இருந்த லிங்குசாமியால் வாங்கிய பத்து கோடியை கொடுக்க முடியவில்லை. இது பணம் வாங்கியவருக்கும் கொடுத்தவருக்கும் இடைய உள்ள பிரச்சினை. ஆனால் லிங்குசாமியை விட்டு விட்டு ஏன் கமல் மீது கம்ப்ளைண்ட் செய்தார் ஞானவேல்?
ஏன் என்றால், கமலை உள்ளே இழுத்தால்தான் பணம் வாங்க முடியும் என்று ஞானவேல் நம்புகிறார். அதனால்தான் கமல் மீது கம்ப்ளைண்ட் செய்தார். இது குறித்த எந்த அறிவும் இல்லாம இந்த நாய் ஏன் வந்து குரைக்கிது?
கமல் ஏமாத்தினார், கமல் பல குடும்பங்களை அழித்தார், கமல் கொள்ளைக்காரர், கமல் பசுத்தோல் போர்த்திய ஓநாய், கமல் ஒழுக்கங்கெட்டவர், கமல் ஊரார் பணத்தை ஆட்டையைப் போடத்தான் அரசியலுக்கு வந்து இருக்கிறார், கமல் கெட்டவர், கமல் ஊதாரி, கமலுக்கு கொள்கை தெரியாது, கமலுக்கு அறிவே இல்லை, கமல் ஒரு பொறுக்கி இப்படி எல்லாம் ராஜசேகர் இல்லை. யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
யார் சொன்னாலும், அதற்கான காரணத்தை காட்ட வேண்டாமா? எடுத்துக் காட்டு சொல்ல வேண்டாமா? சான்று கொடுக்க வேண்டாமா? வக்கீலாக இருந்துகொண்டு சாட்சி ஏதும் இல்லாமல் இப்படி வண்டை வணடையாக புளுகுபவனை ‘ஏண்டா நாயே’ ந்னு கூப்பிடாம வேற எப்படி அவனை அழைப்பது?
முதல்ல நீ எப்படி கட்சிலேருந்து வெளியில போனே? மக்கள் நீதி மய்யத்த வச்சி ஏதாச்சும் எப்படியாச்சும் சம்பாதிக்க முடியுமான்னு அலைஞ்சே. உன்னச் சரியா ஸ்மெல் பண்ணின டாக்டர்.கமல் நீங்க இனிமே டிவி டிபேட்டுக்குப் போகாதீங்கன்னு தடுத்தார். உன்னோட உளறல்களை சகிச்சிக்க முடியாம உன்னை டாக்டர்,கமல்ஹாசன் அவர்கள் தன்னோட நெருங்க விடல. இத நல்லா தெரிஞ்சிகிட்டு ஒரு கட்டத்துல கட்சிய விட்டு விலகிக்கிறதா அறிவிச்ச. டாக்டர் கமலும் நிம்மதின்னு விட்டுட்டாரு.
ஏன்ய்யா.... காலையில விலகுறேன்னு சொல்லிட்டு சாயந்திரம் வந்து, ‘நான் கட்சில இருந்துதான் விலகுறேன். ஆனா தலைவரோட வழக்குகள எல்லாம் நாந்தான் கவனிக்கிறேன்னு’ அவர் பக்கத்துல வந்து நின்னு கூனி குறுகி வழிஞ்சே. அப்ப உன்னை நேருக்கு நேரா பாத்து டாக்டர்.கமல்ஹாசன் என்ன சொன்னாரு? ஞாபகம் இருக்கா?
“வழக்குதானே அதுக்கு என்ன? என் குடும்பமே வக்கீல் குடும்பம்தானே? நான் பாத்துக்கிறேன்’’ அப்போ அவமானப் பட்டு ஓடினியே...அதெல்லாம் ஞாபகம் இருக்கா? திறமை இல்லாதவங்களைக் கூட விட்டு வைப்பார். ஆனா உன்னைப் போல உள்னோக்கத்தோடு பழகும் கயவர்களை தன்னோடு நிற்கவே அனுமதிக்கமாட்டார் எங்கள் ‘சமூக ஞானி’ டாக்டர்.கமல்காசன்.
போ. எங்காவது எலும்பு துண்டுங்க கிடைக்கும். போ.போயி கவ்விக்கோ. இனி இதுபோல காரணம் இல்லாம, சான்று கொடுக்காம, தனிப்பட்ட முறையில எங்கள் சமூக ஞானியை பேசினால் நீ சிறைக்குச் செல்வது உறுதி. எச்சரிக்கை!