மம்தா பானர்ஜியுடன் கமல்ஹாசன் கூட்டு!சுயநினைவுடன் கமல் இருக்கிறாரா என்று அச்சப்படும் ம.நீ.ம. நிர்வாகிகள்!!

காங்கிரஸ் கட்சி, தி.மு.க. கட்சி என்று கூட்டுக்கு அலைந்து , கடைசியில் செ.கு.தமிழரசனுடன் மட்டுமே கூட்டு சேர்ந்திருக்கிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் திடீரென திருணாமூல் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக கமல் தெரிவித்துள்ள விவகாரம், அவரது கட்சி நிர்வாகிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து இன்று கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். அதாவது அந்தமான்  நிக்கோபார் மாநிலத்தில் மக்கள் நீதி மய்யத்துடன் மம்தா பானர்ஜி கட்சி ஒரு வித கூட்டணி ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் வேறு ஒரு கூட்டணியில் இருக்கிறார். மம்தா பானர்ஜியின் நட்பினால் நான் அந்தமானிற்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறேன். 

எனக்கு இது இருவேறு கூட்டணியாகத் தெரியவில்லை. நியாயமாக இப்படித்தான் கூட்டணி இருந்திருக்க வேண்டும். வழி தவறி போய்விட்டது. ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமாக கூட்டணி இருக்கலாம். தேர்தலுக்கு பின் எப்படி சொல்ல முடியவில்லை. நல்லபடியாக இந்த உறவு நீடித்தால் எந்த திசையிலும் நகரலாம். 

தமிழகத்தை பற்றிய சிந்தனை, தமிழர்களின் குரல் பாராளுமன்றத்தில் கேட்க வேண்டும். பிரதமரை மட்டும் முடிவு செய்ய வேண்டிய விசயமாக தெரியவில்லை. இந்த தேர்தல் நம்முடைய தலை எழுத்தை முடிவு செய்யக்கூடிய அஸ்திவாரம்தான் தேர்தல். பிரதமராக யார் வந்தாலும் தமிழகத்திற்கு நல்லது செய்பவராக வரவேண்டும். எங்கள் உரிமைகளை கேட்டு வாங்க வேண்டியது கடமை. நேரம் வரும்போது பிரதமர் யார் என்பதை முடிவு செய்யலாம் என்று வழக்கம்போல் யாருக்கும் புரியாமல் பேசியிருக்கிறார்.

தமிழகத்திலே ஓட்டுப் போடுவதற்கு தொண்டர்களைத் தேடும் நிலையில் இருக்கும்போது அந்தமானுக்குப் போய் தேர்தல் பிரசாரம் செய்யப்போகிறேன் என்று கமல்ஹாசன் சொல்லியிருப்பதை, அவரது கட்சியினரே அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். கமல் சுயநினைவுடன் பேசுகிறாரா என்று சந்தேகப்படுகிறார்கள்.