ஓடும் பேருந்தில் பெண் பயணியின் ஆடைக்குள் கை வைத்த டிரைவர்! கல்லடா டிராவல்சில் நேர்ந்த விபரீதம்!

உறக்கத்தில் இருந்த பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லடா பஸ் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.


கடந்த வியாழக்கிழமை அன்று திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் கல்லடா டிராவல்ஸ் பேருந்தில் கேரளா சென்று கொண்டிருந்தார். கேரள மாநிலம் கண்ணூர் மற்றும் கொல்லம் இடையே பேருந்து சென்று கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணின் உடலை ஒருவர் சீண்டியுள்ளார்.

முதலில் தெரியாமல் பட்டிருக்கும் என்று அந்த பெண் நினைத்துள்ளார். பிறகு அந்த நபர் பெண்ணின் ஆடைக்குள் கைகளை விட்டு சில்மிஷல் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக எழுந்து அலறியுள்ளார். ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

அந்தப் பெண் அலறவே சக பயணிகள் அந்தப் பேருந்து ஓட்டுனர் அடித்து துவைத்து எடுத்து மலப்புரம் மாவட்ட போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் கோட்டயம் மாவட்டம் புது பள்ளியைச் சேர்ந்த ஜான் ஜோசப் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவன் மீது பெண்ணை மானபங்க படுத்த முயற்சித்தல் என்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஓட்டுனர் மீது நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அந்த ஓட்டுனரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற வழக்குகளில் நடவடிக்கை எடுக்க முடியாது அதற்கு காரணம் இந்தப் பேருந்துகள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவைகளாக இருப்பது தான் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பேருந்து நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் உள்ளன.

இரு பயணிகளை தாக்கியது ஒரு பெண் பயணியை பேருந்தில் ஏற்றாமல் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடவிட்டது ஆகிய பல்வேறு புகார்கள் இந்த நிறுவனத்தின் மீது உள்ளன.