கலைஞர் சிலை திறப்பு விழாவில் திமுக எம்பியும் கலைஞர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி ஓரமாக ஒதுக்கி வைக்கப்பட்டார்.
கலைஞர் சிலை திறப்பு விழா! மேடையில் ஏற்றப்படாமல் ஓரமாக ஒதுக்கப்பட்ட மகள் கனிமொழி!
சென்னை முரசொலி அலுவலகத்தில் நேற்று திமுக தலைவராக இருந்த கலைஞரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார்.
இதற்கான விழா மேடையில் திமுக எம்பி தயாநிதி மாறன், திமுக மாவட்டச் செயலாளர் அன்பழகன் ஆகியோருக்கு கூட இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் கலைஞரின் மகளான கனிமொழிக்கு மேடையில் இடம் வழங்கப்படவில்லை.
மாறாக கனிமொழிக்கு மேடையின் முன்புறம் போடப்பட்டிருந்த நாற்காழி தான் ஒதுக்கப்பட்டிருந்தது. தேசிய அளவில் பிரபலமான ஒரு தலைவர் வந்த நிகழ்ச்சியில் தேசிய அரசியலில் ஈடுபட்டு வரும் கனிமொழிக்கு இடம் வழங்கப்படாதது அவரது ஆதரவாளர்களை வருத்தம் அடையச் செய்துள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் கனிமொழி தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாகவும், சிறிய சிறிய விழாக்களில் மட்டுமே கனிமொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும் அவர்கள் புலம்புகின்றனர்.