கடலூர் மாவட்டம் அருகில் காவல் ஆணையத்தின் முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரால் மனமுடைந்த இளம் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலியை மணந்து ஆசை தீர அனுபவித்த காதலன்! கடைசியில் கழட்டிவிட்டதால் காதலி எடுத்த விபரீத முடிவு!

கடலூர் அருகில் சிதம்பரம் காவல் நிலையம் அருகே ஆட்கொண்டான் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா. இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜதீபன் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ராஜதீபனக்கு வேறு இடத்தில் பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனை அடுத்து திவ்யாவை கோவிலுக்கு அழைத்துச் சென்று ராஜதீபன் திருமணம் செய்துள்ளார். ஆனால் காதலித்து திருமணம் செய்த திவ்யாவை கழட்டிவிட்ட ராஜதீபன் பெற்றோர் பார்த்து வைத்த மற்றொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இதனால் மனம் உடைந்த திவ்யா மண்எண்ணெய் கேனுடன் காவல் நிலையம் வந்து, தன்னை எரித்துக் கொள்ள முயன்ற போது உடனடியாக மகளிர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணவேணி திவ்யாவை காப்பாற்றினார்.
இதையடுத்து ராஜதீபனை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. தன்னை திருமணம் செய்து ஆசை தீர அனுபவித்துவிட்டு தற்போது வேறு பெண்ணை ராஜதீபன் திருமணம் செய்வதை தான் விடப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறிச் சென்றார்.