இசையெல்லாமா மருந்தாகும் எனக்கேட்டால் நிச்சயம் மருந்தாகும் என்பதற்கு வாழ்வியல் சான்றுகள் நிறையவே உள்ளன. மகத்துவம் வாய்ந்த இசையினால் சிகிச்சை அளித்து மன ஆரோக்கியத்தை மருத்துவர்கள் மேம்படுத்துகிறார்கள். பெரும்பாலானோரின் மனம் சார்ந்த நோய்களிலிருந்து விடுவித்துக் கொள்ள இசை உதவுகிறது.
அடிக்கடி கோபம் டென்ஷன்னு மன அழுத்தம் ஆகுறீங்களா! இசை சிகிச்சை பற்றி தெரிஞ்சிக்கோங்க?
மன அழுத்தம் என்பது எண்ணங்கள், உடல், மனநிலை ஆகியவற்றில் ஏற்படக்கூடிய அசாதரண மாற்றங்களால் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கம் மற்றும் பசியின்மை ஆகிய பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். ஆய்வுகளின்படி மன அழுத்தத்திற்கு ஆளாபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.
மன அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளைவிட இசை சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை தருவதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இசை சிகிச்சை இதயத்துடிப்பின் வேகத்தை குறைக்கிறது, சுவாசம், இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்த மனநிலையிலிருந்து விலக்கு அளிப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
பேசு சிகிச்சையைவிட இசை சிகிச்சை மேம்பட்டதாக சிகிச்சையாளர்கள் கருதுகிறார்கள். தொடர்ந்து இசையை கேட்டுக் கொண்டிருக்கும் போது மூளையிலுள்ள நியோகார்டெக்ஸ் செயல்பட வைக்கிறது. இது மனிதர்களை அமைதி நிலைக்கு தள்ளுகிறது. மேலும் திடீரென்று உணர்ச்சி வசப்படுவதையும் குறைக்கிறது.
பாடல் எழுதுவது என்பது உங்களது படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கிறது. இதுபோன்று இசை சிகிச்சை முறையில் உள்ள பல்வேறு உக்திகள் மனநோய்களை உடையவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
முதலில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்ட உபகரணங்களின் இசை இசைக்கப்படுகிறது. இந்த முறையில் அவர்களது உணர்வுகளைப் பற்றி தெரிந்து கொள்ள பயன்படுத்துகிறார்கள். சிகிச்சையாளர்கள் இந்த இசையின் மூலமாக நோயாளிகளிடம் உரையாடலைத் தொடங்குகிறார்கள் 8 முதல் 10 அமர்வுகள் வரை சிகிச்சையாளர்கள் இசை சிகிச்சையை கொண்டு செல்கிறார்கள்.
இசை சிகிச்சை தங்கள் உணர்ச்சிப் பெருக்குகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு இசை முக்கியப் பங்காற்றுகிறது. சிகிச்சையாளர்களுக்கும் நோயாளிக்கும் இடையேயான நேர்மறையான எண்ணங்களை உருவாக்குகிறது. இதன் விளைவாக நோயாளிக்கு தன்னம்பிக்கை சிகிச்சையாளர்களால் ஏற்படுத்த விரும்புகிறது.
அதே தன்னைப் பற்றி புரிந்துக் கொள்வதற்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இசை சிகிச்சை பாலமாக அமைகிறது. ஒவ்வொரு வகையான இசையும் ஒரு வகை நரம்பியல் தூண்டல்களை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக மன அழுத்ததில் இருக்கும் போது கிளாசிக்கல் இசை மன அமைதியை ஏற்படுத்துவதாக அமையும்.
அதே நேரத்தில் ராக் வகை இசைகள் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.இசை மனதுடன் ஒன்றிணைந்து இயங்கக்கூடியது. சில பாடல்கள் கேட்டவுடன் நம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும். சில பாடல்கள் நம்மை சோகத்தில் ஆழ்த்தும். சில பாடல்கள் புத்துணர்ச்சி அல்லது மன ஓய்வைத் தரும்.