என்னை பாத்ரூம் கூட போக விடவில்லை! அட்லி மீது சீனியர் நடிகை கூறிய திடுக் புகார்!

விஜய் தற்போது அட்லி உடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து தனது 63ஆவது படத்தில் நடித்து வருகிறார்.


இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த சூட்டிங் ஸ்பாட்டிற்கு கடந்த சில நாட்களாக ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் அதிகமாக வந்து நடித்துக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்த கிருஷ்ணதேவி தற்போது இயக்குனர் அட்லி மீது புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது

நான் சினிமாவில் 30 வருடங்களாக ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து வருகிறேன். சட்டபூர்வமாக அதனை பதிவு செய்துள்ளேன். எனக்கு  56 வயதாகிறது. இதில் கிடைக்கும் பணத்தை வைத்துதான் பிழைப்பை ஓட்டி வருகிறேன். எனக்கு யாரும் கிடையாது .ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். மூன்று நாட்களாக தற்போது சென்னையில் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்த சூட்டிங்கின் போதே என்னை மிகவும் தரக்குறைவாக பேசினர். வெயிலில், ‘அங்கே போ’  ‘இங்கே போ’ என்று அதட்டினர், சிறிது நேரம் கூட நிழலில் உட்கார முடியாது விடாமல் துன்புறுத்தினர்.  இந்த இடத்தில் பாத்ரூம் வசதியும் இல்லை. இப்படி இருக்கையில் நேற்று மதியம் சாப்பாட்டிற்கு வரிசையில் நின்று கொண்டிருந்த போது இயக்குனர்கள், நடிகர்கள் சாப்பிட்ட எச்சில் கரித்துண்டை எங்களது சாப்பாட்டில் கலந்து கொடுத்தனர்.

இதனை பார்த்த எனக்கு அருவருப்பாக இருந்தது இதனை எதிர்த்து கேள்வி கேட்டபோது துணை இயக்குனர்கள் என்னை கெட்ட வார்த்தை பேசி அடிக்கவந்தனர்.  இதனை பார்த்த அட்லி அங்கு நின்று கொண்டே கண்டும் காணாதது போல் இருந்தார். இறுதியாக நான் போலீஸ்க்கு போன் செய்து கூறினேன்.

உடனே அங்கு வந்த போலீசார் விசாரித்தனர். போலீஸ் வந்ததும் உடனடியாக அட்லி அங்கே இருந்து கிளம்பி சென்றுவிட்டார். போகும் போது என்னை பார்த்து, ‘காசை தூக்கி எறி’ எடுத்துட்டு ஓடிடுவாங்க என்றும் கூறினார்.  இது என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. இது குறித்து யார் எங்கு பேச கூறினாலும் நான் வந்து பேசுவேன். இல்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன் என்று இந்த கிளப்பியுள்ளார் கிருஷ்ண தேவி