நீதிமன்ற விமர்சனம்..! நீதிபதி சந்துருவின் அர்த்தமுள்ள சிந்தனை..!

1971 நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் உள்ள பிரிவு 2 (1) (C) ஐ நீக்கக்கோரி பிரசாந்த் பூஷன், எ.ராம், அருண் ஷோரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


இதுகுறித்து, நீதிபதி கே.சந்துரு எழுதியுள்ள பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார். தமிழக இதழுக்கு அவர் எழுதியிருக்கும் கட்டுரை இன்று பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதில் இருக்கும் முக்கிய தகவல்கள் மட்டும் இங்கே.

நீதிமன்றத்தை அசிங்கப்படுத்துவது, களங்கப்படுத்துவது என்பது எந்த விளக்கத்துக்கும் ஆட்படாத ஒரு பொருள் என்றும், இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை பாதிக்கப்பட்ட நீதிபதியே விசாரிக்க தடை ஏதும் இல்லை என்பதும் இன்னும் ஆபத்தானது.

நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பவர்களை தண்டிப்பதற்காக சிவில் அவமதிப்பு வழக்குகளுக்கு மட்டும் சட்டத்தில் இடமளிக்கலாம். குற்றவியல் அவமதிப்பு என நீதிமன்றத்தை விமர்சனமே செய்யக்கூடாது என கூறுவது அடிப்படை உரிமையான பேச்சுரிமைக்கு எதிரானது.

நீதிமன்றத்தை களங்கப்படுத்துவது என்ற குற்றச்சாட்டு, நீதிபதிகளின் அகவியல் சார்ந்த உணர்வுகளை பொறுத்தது ; ஒவ்வொரு நீதிபதியின் கண்ணோட்டத்தையும் பொறுத்தது. அதில், பொதுவான அளவுகோல் இருக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.