குழந்தைகளுக்கு நஞ்சாகிறதா ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடர்? கேன்சர் நோய்க்கு காரணமானது கண்டுபிடிப்பு!

குழந்தை பொருட்களுக்கு உற்பத்தி செய்யும் பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் பொருள் இருப்பதை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இணையத்தில் வாங்கிய ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் அஸ்பெஸ்டாஸின் தடயங்களைக் கண்டறிந்ததாக சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள். இந்நிலையில், பெரிய சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட ஜான்சன் தனது தயாரிப்புகளை பெருமளவில் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. 

உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சமீபத்தில் இணையம் மூலம் வாங்கிய பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் பரிச்சோதனையில் புற்றுநோயை உருவாக்கும் கிரிஸோடைல் என்ற பொருளை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட, சுமார் 33,000 பவுடர் பாட்டில்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன், முந்தைய சோதனைகளில் அஸ்பெஸ்டாஸ் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது. மேலும், தனது சொந்த விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி நிறுவனம் தரப்பில் கடந்த மாதம் நடந்த சோதனையில் அஸ்பெஸ்டாஸ் இருப்பதாக எந்த முடிவுகள் கிடைக்கவில்லை என்றும், நிறுவனத்தின் டால்கம் பவுடர் தயாரிப்புகள் தங்களுக்கு புற்றுநோயைக் ஏற்படுத்தியதாக ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கை எதிர்கொள்கிறது. அது மட்டுமின்றி ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி நிறுவனம் எந்த ஒரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.