ஜியோவில் மீண்டும் அவுட் கோயிங் இலவசம்..! ஆனால் நீங்கள் இப்படி டாப் அப் செய்ய வேண்டும்! எப்படி தெரியுமா?

பிற நெட்வொர்க்குகளுக்கு செல்போனில் பேசினால் நிமிடத்திற்கு 6 பைசா ஜியோ அறிவித்திருந்த நிலையில் வாடிக்கையாளர்களை கவர மீண்டும் புதிய யுக்தியை கையாண்டுள்ளது.


பல ஆண்டுகளாக இலவச அவுட் கோயிங் சலுகை வழங்கி வந்த ஜியோ டிராய் விதிகளின்படி கடந்த வாரம் வெளியிட்ட ஒரு அறிவிப்பு ஒட்டு மொத்த ஜியோ வாடிக்கையாளர்களின் தலையில் இடி விழுந்தது போல் ஆனது. ஜியோ சலுகைகளை நம்பி வாங்கிவிட்டு ஏமாந்து விட்டோமோ அவசரப்பட்டு மற்ற நெட்வொர்க்கில் இருந்து தெரியாமல் ஜியோவுக்கு மாறிவிட்டோமோ என்று புலம்பாத வாடிக்கையாளர்களே இல்லை. 

இந்நிலையில் வாடிக்கையாளர்களை இழந்துவிடக்கூடாது என்பதற்காக புதிய கட்டண சலுகைகளை அறிவித்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது. அது என்னவிதமான டாப் அப் திட்டங்கள் தெரியுமா?

ரூ.10 டாப் அப் செய்தால் 124 நிமிடங்கள் இலவச அவுட்கோயில் கால்கள் மற்றும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். 20 ரூபாய் கொடுத்து டாப் அப் செய்பவர்களுக்கு 249 இலவச அவுட்கோயிங் கால்கள் மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.50க்கு டாப் அப் செய்யும் வாடிக்கையாளர்கள் 656 நிமிடங்கள் மற்றும் 5 ஜிபி இலவச டேட்டா பெறலாம். ரூ.100 டாப் செய்தீர்கள் ஆனால் 1,362 அவுட் கோயிங் நிமிடங்கள் மற்றும் 10 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இந்த புதிய டாப் அப் திட்டங்களை பயன்படுத்தி, ஜியோ பயனர்கள் பிற நெட்வொர்க் எண்களுக்கு அழைப்பு சேவையைக் குறைந்த கட்டணத்தில் இலவச டேட்டாவுடன் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானது தற்போது ஜியோ வாடிக்கையாளர்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.