ஜியோ வழங்கும் அடேங்கப்பா ஆஃபர்! ரூ.600க்கு பிராட்பேண்ட், லேண்ட்லைன், கேபிள் சேவை!

டெல்லி: ரூ.600க்கு பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் கேபிள் சேவை தர , ஜியோ முடிவு செய்துள்ளது.


தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் புதிய விதிமுறைகளின்படி, நாடு முழுவதும் டிவி கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, பிராட்பேண்ட் சேவைக்கான கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால், மக்கள் பலரும் டிவியை ரிசார்ஜ் செய்யாமலேயே, கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். 

இந்நிலையில், மக்களின் தலைவலியை தீர்த்து வைக்க, முகேஷ் அம்பானியின் ஜியோ இன்ஃபோகாம் புதிய அதிரடி சேவையை வழங்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஆம். ரூ.600க்கு, பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் கேபிள் டிவி சேவையை மாதந்தோறும் வழங்க, ஜியோ தீர்மானித்துள்ளதாம்.  தற்சமயம், இந்த சேவை நாட்டின் சில இடங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் தரப்படுவதாகவும், விரைவில், பல இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி ஜியோவின் இந்த அதிரடி சேவை நடைமுறைக்கு வந்தால், கேபிள் டிவி நிறுவனங்கள், பிராட்பேண்ட், லேண்ட்லைன் சேவையில் ஈடுபட்டுள்ள மற்ற நிறுவனங்கள் மூட்டையை கட்ட நேரிடும் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விசயமாகும். ஏற்கனவே, தொலைத்தொடர்பு சேவையில் ஜியோவின் வரவால், ஏர்டெல் உள்ளிட்ட போட்டி நிறுவனங்கள் தள்ளாடி வருவது குறிப்பிடத்தக்கது.