ஜெயலலிதாவின் பாமக ஸ்லீப்பர் செல்! ஜிகே மணி ஒப்புதல் வாக்குமூலம்! டென்சனில் அய்யா!

எடப்பாடி பழனிசாமி நேற்று (20ம் தேதி) சேலத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை அறிமுகப்படுத்திப் பேசினார். கொங்கு பெல்ட் பகுதியில்தான் அ.தி.மு.க.வுக்கு அதிக சீட் கிடைக்கும் என்பதால், அந்தப் பகுதியில் மட்டும் அவர் அதிக கவனம் செலுத்திவருகிறார்.


நேற்று முதன்முதலாக பா.ம.க.வின் ஜி.கே. மணியும் எடப்பாடியுடன் சேர்ந்து மேடையேறினார். மேடையில் ஆளாளுக்கு ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியதைக் கேட்டு தானும் உணர்ச்சிவசப்பட்டு ஜி.கே.மணி பேசிய விவகாரம்தான் இப்போது அவருக்கே சிக்கலாக மாறியிருக்கிறது.

அதாவது ஜெயலலிதா தன்னுடைய எதிர்கால நலனுக்காக பணம் தர முயற்சி செய்ததாகவும், தான் அதனை மறுத்துவிட்டேன் என்றும் கூறியிருந்தார்.  அதாவது அறைகுறையாக அன்று நடந்த சம்பவங்களை மட்டும் பேசியிருந்தார். இந்த விஷயம் கேள்விப்பட்டு பா.ம.க.வினர் கொந்தளிக்கிறார்கள்.

ஜெயலலிதாவிடம் பணம் வாங்கிக்கொண்டு, பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்துகொண்டே அதாவது ஜெயலலிதாவின் ஸ்லீப்பர் செல்லாக இருந்துள்ளார் ஜி.கே.மணி. திடீரென அவர் ஜெயலலிதாவுக்கு எதிராக எதுவும் பேசுவதில்லை என்பதிலேயே சந்தேகம் எழுந்தது.இப்போது அவரே ஜெயலலிதா பணம் கொடுக்க முயற்சி செய்தார் என்று சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதா பணம் கொடுத்தபோது அதை வாங்க மறுத்தார் என்பது உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை. அவர் நிச்சயம் வாங்கியிருப்பார். நாங்கள் இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே அய்யா ராமதாஸிடம் குற்றம் சாட்டினோம். அப்போது அவர் ஜி.கே.மணியைத்தான் நம்பினார். இப்போது உண்மை தெரிந்து டென்ஷன் ஆகியிருக்கிறார். ஆனால், தேர்தல் நேரம் என்பதால் அமைதியாக இருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு மணிக்கு கெட்ட காலம்தான் என்கிறார்கள்.

மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு பலமா பேசிட்டாரே மணி.