ஏமாற்றிய ஆண் மகன்! நடுரோட்டில் போட்டு புரட்டி எடுத்த பெண்மணி! ஏன் தெரியுமா?

ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி எனக் கூறி பணம் பறிப்பதற்காக ஏமாற்ற முயன்ற வாலிபர் ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் புரட்டி எடுத்தார்.


ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அப்பகுதியில் ஒரு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் ஒருவர் நாகரீகமாக உடையணிந்து ஒவ்வொரு கடையாக சென்று பரிசோதனையில் ஈடுபட்டபோது போல் பார்த்து வந்துள்ளார். இதையடுத்து அவர் தம்மை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி எனக் கூறியுள்ளார். 

உடனே ஒரு கடையில் இருந்த ஒரு பெண் அவரை ஒரு நாற்காலியில் உட்காரச் சொல்லியுள்ளார் .அப்போது அவர் அந்த பெண்ணிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு அந்தப் பெண்ணை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப் போய் இருந்தார். இதையடுத்து அந்த நபர் காட்டிய அடையாள அட்டை போலி என்பதை அப்பெண்ணின் உறவுக்காரர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

இதையடுத்து அவர் வைத்திருந்தது போலி அடையாள என்பதை கண்டுபிடித்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரி எனக் கூறியவரை கீழே தள்ளி புரட்டி எடுத்துள்ளனர். பின்னர் அந்தப் பெண் காலணியால் அந்த நபரை அடித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்து போலீசில் ஒப்படைத்தார். அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.