ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் 25 படம் தயாராகிறது.
ஜேம்ஸ்பாண்ட் அடுத்த பட டைட்டில் ரெடி! ஜேம்ஸ்பாண்ட் இறந்துவிடுவாரோ?

ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கிய இயன் ஃபிளமிங் (1953) மொத்தமே 12 கதைகள்தான் எழுதினார்,தனது ஹீரோவை ஹீராவாக வைத்து.அவர் போய் விட்டார்.அந்த படங்களை இயக்கிய இயக்குநர்கள் இல்லை,பாண்டாக நடித்த கதாநாயகர்கள் பல முறை மாற்றப்பட்டு விட்டார்கள்.
ஆனால் ,இப்போது 25வது படம் உருவாகிறது ஜேம்ஸ்பாண்டை ஹீரோவாக்கி.ஹாலிவுட்டில் இது ஒரு ரிக்கார்ட்,கேப்டன் அமெரிக்கா,சூப்பர் மேன் ,ஸ்பைடர் மேனெல்லாம் அருகில் கூட நெருங்க முடியாது.இப்போது பாண்ட் வேடத்தில் நடிக்கும் டேனியல் கிரைக்குக்கு இது தான் கடைசிப் படமாம்.புதிய படத்தின் டைட்டில் 'No TiMe To Die' ! .
தமிழில் சொன்னால் இறப்பதற்கு நேரமில்லை!.இந்த டைட்டில் அறிவிக்கப்பட்ட உடனே உலகெங்கும் விவாதப் பொருளாகி விட்டது.இந்த டைட்டில் இந்தப் படத்தில் ஜேம்ஸ்பாண்ட் இறந்துவிடப் போகிறாரா? என்பதே அந்த விவாதங்களின் மையப்புள்ளி!இத்தனைக்கும் பாண்ட் படத்தின் டைட்டிலில் மரணம் இடம் பிடிப்பது இது முதல் தடவை அல்ல.இதற்கு முன்பே 'லிவ் அண்ட் லெட் டை',டுமாரோ நெவர் டைஸ்,டை அனதர் டே! என்று பலமுறை பாண்ட் மரணத்தை சந்திததொடர்கிறார்கள்.
படத்தை இயக்கப் போவது கேரி ஜோஜி ஃபுக்குங்கா,இவர் ஹெச்.பி.ஒவில் ட்ரூ டிடக்டிவ்,நெட் ஃபிலிக்ஸில் மேனியாக் தொடர்களை இயக்கியவர்.படம் அடுத்த வருடம் ஏப்ரல் 3ம் தேதி இங்கிலாந்திலும்,ஏப்ரல் 8ம் தேதி அமெரிக்காவிலும் ரிலீசாகப் போகிறது. நவோமி ஹாரிஸ் மனிப்பென்னியாகவும் ரோரி கின்னர் எம்.6 தலைவர் பில் டேனராகவும் இதிலும் தொடர்கிறார்கள்
ஆனால்,இந்த டைட்டில் அறிவிக்கப் பட்ட உடனே அமெரிக்க குழந்தைகள்,சாப்பிட நேரமில்லை,குளிக்க நேரமில்லை என்று ட்வீட் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம்.