சென்னையில் இன்று நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையால் திமுக மேலிடம் கலக்கத்தில் உள்ளது.
ஸ்டாலின் மகன் உதயநிதியை நெருங்கும் வருமான வரித்துறை! பேரதிர்ச்சியில் திமுக மேலிடம்!

சென்னையைச் சேர்ந்த பிரபல பைனான்ஸியர்கள் இரண்டு பேர் வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிரடியாக நுழைந்து. அதிலும் அந்த இரண்டு பைனான்சியர்கள் தொடர்புடைய சுமார் ஏழு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையால் திமுக மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்தது.
காரணம் எழும்பூரில் நடைபெற்ற சோதனைக்கு ஆளானவர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ஆவார். உதயநிதி ஸ்டாலின் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருபவர் அவர்தான் என்று சொல்லப்படுகிறது. அவர் மூலமாக திமுக வேட்பாளர்களுக்கு பணம் செல்வதாக வந்த தகவலின் அடிப்படையில்தான் இந்த சோதனை நடைபெற்றதாக சொல்கிறார்கள்.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற சோதனையில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் ஸ்டாலின் மகன் உதயநிதி என் நண்பர் வீடு வரை வருமான வரித்துறை வந்தது திமுக மேலிடத்திற்கு மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் உதயநிதியின் நண்பர் வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு வருமான வரித்துறை அடுத்த நடவடிக்கை எடுக்கலாம் என்கிற சந்தேகம் திமுகவிற்கு இருக்கிறது. ஒருவேளை உதயநிதியை விசாரணைக்கு அழைத்தால் என்ன செய்வது என்றும் திமுக சட்ட வல்லுனர்கள் ஆலோசனைகள் உள்ளனர்.