எனக்கு அது வேணும்! எந்த பெண்ணும் கேட்காததை மணமேடையில் கேட்ட முஸ்லீம் மணமகள்! தட்டாமல் கொடுத்து நெகிழ வைத்த மணமகன்!

இஸ்லாமியத்தில் மஹராக என்ற வழக்கத்தில் மணப்பெண் தன் கணவரிடம் திருமண கொடையாக கேட்பது வழக்கம் அந்த வகையில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரிடம் புத்தங்களை கேட்டுள்ளார்.


 தனது மனைவியில் ஆசையை நிறைவேற்றும் விதமாக அவர் பைபிள், குர்ஆன், கீதை மற்றும் இந்திய அரசியலமைப்பு உள்ளிட்ட புத்தகங்களால் மனைவிக்கு பரிசை கொடுத்துள்ளார். இதனை பார்த்து மகிழ்ந்த மனைவி கணவனின் பரிசை ஏற்கொண்டுள்ளார். மேலும், இந்த புகைப்பட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவதோடு அனைவரிடமும் பாராட்டையும் பெற்றுள்ளது இந்நிகழ்வு. 

மஹர் என்பத மணமகளின் உரிமை ஆகும். மேலும், அதை மணமகன் மறுக்க முடியாது. மஹராக என்ற முறை இஸ்லாமியத்தில் உள்ள ஒரு வழக்கம். இந்த வழக்கத்தில் திருமணம் ஆகும் முஸ்லிம் பெண்கள் திருமண கொடையாக தன்னுடைய கணவனிடம் விரும்பிதை கேட்கலாம். அது பணமாகவோ, நகையாகவோ, வீடாகவோ அல்லது ஏதேனும் பிடித்ததை வாங்கிக்கொள்ளலாம்.

அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த் அஞ்னா நிஜாமுக்கும் இஜாஸ் ஹக்கிமுக்கும் கடந்த அக்டோபரில் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது திருமணம் பேசி முடிக்கும் போது மணமகள் அஞ்னா நிஜாம், மஹராக முறைப்படி மணமகள் இஜாஸிடம் தனக்கு 80 புத்தகங்கள் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு அவரும் சம்மதித்துள்ளார்.

இந்நிலையில், இந்த தம்பதியருக்கு கடந்த டிசம்பர் 29ம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. அப்போது இஜாஸ் தனது மனைவின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அஞ்சாவுக்கு 80 புத்தகங்களுக்கு பதில் கூடுதலாக 20 புத்தகங்கள் சேர்த்து 100 புத்தமாக பரிசளித்துள்ளார்.

இந்த பரிசில் அப்படி என்ன ஆச்சிரியம் என்று பார்த்தல், தனது மனைவிக்கு அவர் பைபிள், குர்ஆன், கீதை மற்றும் இந்திய அரசியலமைப்பு உள்ளிட்ட புத்தகங்கள் கொடுத்து அவரை மகிழ வைத்துள்ளார்.

தற்போது புத்தங்களால் சூழப்பட்ட அஜ்னா நிஜாமின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. மக்களின் இதயங்களை இந்த தம்பதியனர் வென்றுள்ளனர். மேலும், மனைவி விரும்பியத்தை வாங்கி கொடுத்த இஜாஸையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.