உதயநிதிக்கு பதவி கொடுக்க திமுக என்ன சங்கரமடமா? கொதிக்கும் அழகிரி!

ஜூன் 1ம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு இளவரசன் பட்டம் கொடுக்கப்பட இருக்கிறது. ஆம், ஸ்டாலின் முதலில் வகித்துவந்த இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுக்க தி.மு.க. தயாராகி வருகிறது. இதனை முறைப்படி அறிவிக்க வேண்டும் என்பதால் அனைத்து மாவட்டச் செயலாளர்களிடம் இருந்தும் கடிதம் பெறப்பட்டு வருகிறது.


இந்தத் தகவல் தெரியவந்ததும் அழகிரி கடும் கோபத்திற்கு போயிருக்கிறாராம். கருணாநிதி செத்தபிறகு நடந்த பஞ்சாயத்தில், அழகிரி கட்சிப் பதவி கேட்டபோது, ஒரு கட்சிக்குள் எத்தனை பேரை கொண்டுவருவது என்று சொல்லித்தான் வெளியே அனுப்பினார்கள். இத்தனைக்கும் மத்திய அமைச்சராக இருந்தவர் அழகிரி.

இந்த பஞ்சாயத்தில் செல்வியும் கலந்துகொண்டார். அவர் சொன்னதால்தான் அழகிரி மௌனமாக ஒதுங்கிப் போனார். இப்போது, நேரடியாக ஸ்டாலினின் வாரிசு இறக்கப்படுவது தெரிந்துதான் அழகிரி கோபமாகி இருக்கிறாராம்.

தி.மு.க. சங்கர மடம் கிடையாது, அதில் உதயநிதிக்குப் பதவி கொடுப்பதாக இருந்தால், இனிமேல் நீங்கள் வேறு ஒரு அழகிரியை பார்க்க வேண்டி இருக்கும். தி.மு.க.வை அழிப்பதற்கு எதையும் செய்வேன் என்று தகவல் அனுப்பியிருக்கிறாராம்.

அழகிரி கொந்தளிக்கும் விவகாரம் இப்போது ஸ்டாலினுக்குப் போயிருக்கிறது. அவர் என்ன செஞ்சாலும் பார்த்துக்கலாம், நீங்க பட்டாபிஷேகத்தை நடத்துங்க என்று சொல்லிவிட்டாராம். என்ன அழகிரி சண்டைக்கு ரெடியா?