திருச்சியில் தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்காக பிரமாண்ட மாநாடு நடத்தப்படுகிறது.
செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டுக்குக் காரணம், இதுதானா..?

இதை மறைக்கும் வகையிலும், தி.மு.க.வுக்கு அதிர்ச்சி தரும் வகையிலும் ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காகவே இன்று செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று, கரூர் ராமேஸ்வரப்பட்டி கிராமத்தில் உள்ள மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி வீடு மற்றும் கரூரில் உள்ள அவரது தம்பி அசோக் ஆகியோர் வீடுகளில் சென்னை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து சென்னையில் உள்ள வீடு, ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜி வீடு, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது தம்பி அசோக் டெக்ஸ், வீடு என மொத்தம் 4 இடங்களிலும் போலீசார் சோதனை செய்தனர்.
போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த நேரத்தில், வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியதாக செந்தில்பாலாஜி மீது போடப்பட்டிருக்கும் பழைய வழக்கு தொடர்பாகவே, நீதிமன்ற அனுமதியுடன் இந்த சோதனை நடைபெறுகிறது என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த ரெய்டு விவகாரத்தில் சென்னை மந்தைவெளியில் உள்ள செந்தில் பாலாஜி வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. என்னென்னமோ பண்றாங்கப்பா.