யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து ஈஷா ஆசிரமம் நடத்தி, அங்கே பிரமதர் நரேந்திர மோடியை வரவழைத்து, அந்த இடத்துக்கு சொந்தக்காரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் ஜக்கி வாசுதேவ்.
ஈஷா மையத்தினர் பாம்பு பிடித்தால், சிறை தண்டனை கிடையாதா? என்ன செய்கிறது வனத்துறை?
அவரது ஆசிரமத்தில் நேற்று பிடிபட்ட 16அடி கருநாகப் பாம்புதான் பல்வேறு சிக்கலைத் தூண்டிவிட்டுள்ளது. ஏராளமான ஆண்களும், மான்களும் பயிற்சி பெற்றுவரும் அந்த இடத்துக்கு மான், பன்றி, நாகம் போன்றவை அடிக்கடி எட்டிப் பார்ப்பதுண்டு.
சாதாரண ஒருவர் இதுபோன்ற உயிர்களை அடித்தாலே, விரட்டினாலோ வனத்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.
ஆனால், ஈஷா யோகா மையத்திற்கு நீரோடையில் இருந்து 16 அடி நீளமுள்ள கரு நாகப்பாம்பு யோகா மையத்துக்கு உள்ளே நுழைந்தது. அதை அங்குள்ள யோகப் பயிற்சி பெற்றவர்கள் பாம்பு பிடிக்கும் நிபுணர்கள் போன்று பாம்பிற்கு எந்த பாதிப்பும் இல்லாதபடி கையாண்டு பாம்பை பிடித்தனர்.
இதை பார்க்கும்போது இவர்கள் இதற்கும் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். இதுபோன்று ஏகப்பட்ட காட்டு மிருகங்களை பிடித்து, அடித்து கொன்று போட்டிருப்பார்கள் என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
நேற்று மக்கள் முன்னிலையில் பாம்பு வந்ததால், லாவகமாகப் பிடித்தார்கள். அதுவே ஆள் இல்லாத இடம் என்றால் கொன்றுவிடுவார்கள் என்று ஆசிரம வாசிகளே தகவல் தெரிவிக்கிறார்கள். வனத்துறையினர் இதன் மீது ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா அல்லது வழக்கம்போல் கட்டிங் வாங்கி வருவார்களா?