ராஜா ராணி சீரியலில் செம்பாவாக அசத்திய அல்யா மனசா கடந்த செப்டம்பர் மாதம் திடீரென தன்னுடன் நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்ட நிலையில் அப்போதே அவர் கர்ப்பமாக இருந்திருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா செம்பா? வளைகாப்பு நிகழ்ச்சி மூலம் அம்பலமான உண்மை!

திருமணம் செய்த கையோடு செம்பா வீட்டில் காதல் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை அதனால் திடீரென திருமணம் செய்து கொண்டதாக கூறி சஞ்சீவ் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் திடீர் திருமணம் குறித்து செம்பா ஏதும் கூறாமல் இருந்து வந்தார். அதே சமயம் தனது பெற்றோர் தன்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இதன் பின்னணியில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டது பிரச்சனை இல்லை, அவர் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமானது தான் பிரச்சனை என்று செம்பாவின் பெற்றோர் கருதியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். அதனால் தான் திருமணத்திற்கு முதல் நாள் வரை பிரச்சனை என்று சஞ்சீவ் அப்போது கூறியதை தற்போது நினைவுபடுத்துகிறார்கள்.
மேலும் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில் ஜனவரியில் செம்பாவிற்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அதாவது ஐந்தாவது மாதத்திலேயே வளைகாப்பு செய்துள்ளனர். ஆனால் செம்பாவின் வயிறு ஏழு மாத கர்ப்பம் போல் இருந்ததாக விழாவில் பங்கேற்றவர்கள் அவர் காதுபடவே பேசிச் சென்றனர்.
இதனால் தான் செம்பா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியிருக்கலாம், விவகாரம் பெரிதாகிவிடக்கூடாது என்று ரகசியமாகவும் அவசரமாகவும் சஞ்சீவை திருமணம் செய்திருக்கலாம் என்று சின்னத்திரை உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.