பிரேமலதா எதிர்பார்ப்பது பணமா அல்லது எம்.பி. சீட்டா.? ஜி.கே.வாசனுக்கு என்னாச்சு?

சும்மா இருந்த சங்கை ஏன் ஊதிக்கொண்டு இருக்கிறார் பிரேமலதா என்றுதான் கட்சிக்காரர்களே கடுப்பானார்கள். ஆம், தேர்தல் நேரத்தில்கூட கேட்கப்படாத எம்.பி. சீட் கேட்டு எதற்காக இப்போ எடப்பாடியிடம் தூது போகவேண்டும் என்பதுதான் அவர்களுடைய கேள்வி.


சுதீஷ் இந்த விவகாரம் குறித்து வேறு வழியில்லாமல் எடப்பாடியை சந்த்து, ஏகமாய் வாங்கிக் கட்டிக்கொண்டாராம். ஏம்ப்பா, ரூபா வேணும்னா நேரடியா கேட்கலாமே, எதுக்கு இப்படி சுத்தி வளைச்சுக் கேட்கிறீங்க என்பதுபோல் பேசி விரட்டி விட்டாராம்.

அதே நேரம், இதுவே எடப்பாடியின் வேலைதான். பிரேமலதா குடைச்சல் கொடுத்தால், சீட் கேட்கும் சிலரும் கேட்க மாட்டார்கள் என்று நினைக்கிறாராம் எடப்பாடி. எப்படியோ, சும்மா இருந்த பிரேமலதாவுக்குஒரு சூட்கேஸ் கிடைக்கும் வாய்ப்பு வந்தாச்சு.

இதற்கு இடையில் ஜி.கே.வாசனுக்கும் ஒரு எம்.பி. சீட் என்று உலவிய வதந்தியைக் கண்டு, அவரே அதிர்ந்து போனாராம். 

அடப் போங்கப்பா.