வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு..க. கூட்டணியின் வேட்பாளர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிமுகம் செய்துவைத்தார். ஆனாலும், அவரை ஏற்றுக்கொள்ளாமல் அடம் பிடித்தன.
அ.தி.மு.க. நல்லாட்சி... எடப்படிதான் முதல்வர் வேட்பாளர் _ பா.ஜ.க. அண்ணாமலை பல்டிக்குக் காரணம் நட்டாவா?

ஆனால், சமீபத்தில் மதுரைக்கு வந்த தேசிய பா.ஜ.க. தலைவர் ஜெ.பி.நட்டா வெளிப்படையாகவே அ.தி.மு.க. கூட்டணியில்தான் தாங்கள் இருக்கிறோம் என்று அறிவிப்பு செய்தார்.அதன்பிறகே பா.ஜ.க.வின் அடுத்தகட்டத் தலைவர்கள் தங்கள் நிலையில் இருந்து பல்டியடித்து அ.தி.மு.க.வை ஏற்பதாகத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில்,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமியை வானளவுக்குப் புகந்து பாராட்டினார்.
அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளோம். எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அ.தி.மு.க என்பது பெரிய கட்சி. அந்த கட்சியுடனான கூட்டணியை பாஜக தேசிய தலைமை உறுதி செய்துள்ளது. அதேபோல், அதிமுகவின் முதல்வர் வேட்பாளரையும் பா.ஜ.க ஏற்றுக் கொண்டுள்ளது.
அ.தி.மு.க நல்லாட்சி கொடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் நல்ல மரியாதை உள்ளது. எனவே எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இந்த தேர்தலில் 4 மடங்கு வாக்குகளை பா.ஜனதா அதிகம் பெறும்...’ என்று கூறியிருக்கிறார்.
இதைத்தானப்பா அன்னைக்கே அ.தி.மு.க.வில் சொன்னாங்க.