தி.மு.க.வில் சேர்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்! வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட கதை!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சரான விஜயபாஸ்கர்தான் கரூர் மாவட்டத்தின் ஒரே அமைச்சர்.


கரூர் மாவட்டத்தில் இவரது ஒரே எதிரியாக இருந்தவர் செந்தில் பாலாஜி.நல்ல சில்லரை புழங்கும் துறை அமைச்சராக இருந்தும் ,மாவட்டத் தலை நகர் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வென்றதிலிருந்தே விரக்தியில் இருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.இதையே உள்ளூர் அதிருப்தியாளர்கள் வேறு அடிக்கடி சொல்லிக் காட்டுகிறார்களாம்

இதனால் , பாதுகாப்பான கட்சிக்கு'ஜம்ப்'ஆகிவிடும் ஐடியாவுக்கு வந்து விட்டாராம்.அடுத்து ஆட்சி மாறினால் வழக்கு,வம்புகளில் இருந்து தப்பிக்க அதுதான் ஒரே வழி என்று அவருக்கும் தெரிந்தே இருக்கிறது. ஆனால்,அதில் இருக்கும் சிக்கல்களும் அவருக்குப்.புரிந்திருகிறது.திமுகவுக்கு போகலாமென்றால் பழைய உள்ளூர் எதிரி செந்தில் பாலாஜி அங்கே இருக்கிறார்.

காங்கிரசுக்கு போகலாமென்றால் அங்கே ஜோதிமணி இருக்கிறார் என்று அவர் குழம்பி நிற்கிறார். இந்த நிலையில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடக்கும் குளங்களை தூர் வாரும் வேலையில் அமைச்சரின் செல்வாக்கு எடுபடாததைப் பார்த்த திமுக பிரமுகர் ஒருவர் அமைச்சர் எங்கள் கட்சியில் இணையலாமே என்று வெளிப்படையாக பேச,அதிர்ச்சி அடைந்த அடைந்த அமைச்சர் '

எனக்கு வயதாகி விட்டதே,உங்கள் கட்சிக்கு வந்தாலும் இளைஞரணி தலைவர் பதவி கிடைக்காதே ' என்று உளற, ' அப்போ வயசு கம்மியா இருந்தா கட்சி மாறி இருப்பாரா ' என்கிறதாம் எதிர் கோஷ்டி. இப்போதைய நிலவரப்படி கரூரில் இதுதான் டாக் ஆஃப்த டவுன்.