பா.ஜ.க.வுக்குத் தாவுகிறாரா மாஃபா.பாண்டியராஜன்? சந்தேகம் எழுப்பும் அ.தி.மு.க.வினர்!

முழுக்க முழுக்க பா.ஜ.க. அமைச்சர் போலவே மாஃபா. பாண்டியராஜன் இப்போது செயல்படுகிறார் என்று அ.தி.மு.க.வினரே புகார் சொல்கின்றனர்.


பா.ஜ.க. என்ன ஒருதிட்டம் கொண்டுவந்தாலும் முதல் நபராக பாராட்டு தெரிவிப்பவர் பாண்டியராஜன்தான். சமீபத்தில் அமித்ஷா பிறந்த நாளை தமிழகத்தில் யாரும் கண்டுகொள்ளாத நிலையில், வலியப் போய் பாராட்டியிருக்கிறார் பாண்டியராஜன். நாளைய வரலாறு உங்களை நினைவில் வைக்கும் என்று கூறி பரம்பரை பா.ஜ.க.வினரையே பயம் கொள்ள வைத்திருக்கிறார்.

அது மட்டுமின்றி, தமிழர் பண்பாடு மற்றும் வரலாற்று மறைப்பில் ஈடுபட்டு வருகிறார் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் குற்றம் கூறியிருக்கிறார். பா.ஜ.க.வுடன் இணைந்துதான் கீழடி அகழ்வாய்வை நீர்க்கச் செய்கிறாராம். கட்சி மாறுவது பாண்டியராஜனுக்கு கை வந்த கலை. அதனால் எந்த நேரமும் மாறிவிடலாம்.