மாணிக்கராஜாவின் மர்ம கெஸ்ட் ஹவுஸில் தங்குவதுதான் தினகரனின் வழக்கம்.
அழிவுப் பாதையில் தினகரன்! காரணம் மாணிக்கராஜா! இசக்கியின் கெஸ்ட் ஹவுஸ் கேள்விக்கு பதில்!

எப்போது மாணிக்கராஜாவின் கெஸ்ட் ஹவுஸ்க்குப் போனாரா, அன்றுமுதல் அ.ம.மு.க. போயே போச்சு. மாணிக்க ராஜாதான் கட்சியை அழித்துவருகிறார் என்று இசக்கி சுப்பையா பேட்டி கொடுத்திருந்தார். ஏற்கெனவே பாப்புலர் முத்தையா, மைக்கேல் ராயப்பன் போன்றவர்களும் மாணிக்கராஜா மீது குற்றம் சுமத்தித்தான் கட்சியில் இருந்து வெளியேறினார்கள். இதுவெல்லாம் உண்மைதானா என்று மாணிக்கராஜா இப்போதுதான் வாய் திறந்து பேசியிருக்கிறார்.
‘‘எல்லாவற்றிக்கும் கணக்குப் போட்டு பார்ப்பவர் இசக்கி சுப்பையா. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அவரது போக்கில் மாற்றம் இருந்தது. தேர்தல் நேரத்தில் இசக்கி சுப்பையா விரக்தியில் இருந்தார் என்பது தலைமைக்கு தெரியும். நிர்வாகிகள் சேர அழைப்பு விடுத்த நிலையில் அவருடன் யாரும் சேராதததுடன் தனது காண்ட் ராக்ட் தொழில் கெட்டு விடும் என்பதால் தான் அவர் இந்த முடிவு எடுத்துள்ளார். என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் பேசுகிறார் இசக்கி சுப்பையா.
உடன் இருந்தவர்களின் எதிர்காலத்துடன் விளையாடி வருகிறார். கட்சி மாறிய பலர் கடைசியில்தான் உள்ளனர். ஏற்கனவே பலர் தொடர்ந்து இருக்க மாட்டார்கள் என ஏற்கனவே தினகரன் சொல்லிவிட்டார். கட்சிக்கு குழப்படி செய்தவர்கள் ஆதாயம் தேடியவர்கள் இப்போது இல்லை. இவர்கள் 10 தவறு செய்தால் 1 தவறை தான் நான் மேலிடத்தில் சொல்வேன். மேலிட உத்தரவை மீறி நான் எதையும் செய்வதில்லை. கட்சிகள் இணையும் நிலை வந்தால் இங்கு தான் வர வேண்டும்.
முக்கிய பொறுப்பாளர்கள் ஒரு சிலர் மட்டுமே விலகி உள்ளனர். அவரது ஆதரவாளர்களுடன் தான் அவர்கள் செல்ல வேண்டுமே பக்கத்து மாவட்டத்தினரை அழைத்து கொண்டு செல்வது எந்த வகை என தெரியவில்லை. நல்ல மனிதருக்கு இது அழகல்ல. தேர்தல் கணக்குகளை முறையாக கணக்கு காட்ட தெரியாதவர் ஆர்.பி.ஆதித்தன். அவர் அந்த குடும்பத்தை சார்ந்தவரா அல்லது அவர் பிறந்த உடன் மாற்றி கொடுத்து விட்டார்களா என தெரியவில்லை.
விலகி சென்ற தங்க தமிழ் செல்வன், இசக்கி சுப்பையா உள்ளிட்ட பலரை நீக்க வேண்டிய நிலையில் தான் அ.ம.மு.க. இருந்தது. இவர்கள் பணம் வாங்குவதாக ஏற்கனவே புகார் வந்த வணணம் இருந்தது. என் பேச்சை கேட்டு கொண்டு தினகரன் செயல்படுவதாக கூறுவது பொய். சில பச்சோந்திகள் வெளியேறுவதால் அ.ம.மு.க. தூய்மை அடைகிறது. ஒருவர் போனால் 40 பேர் வருகிறார்கள்’’ என்றும் தெரிவித்தார். கெஸ்ட் ஹவுஸ் விவகாரம் பற்றி ஏன் சொல்ல மாட்டேங்கிறார்?