என்னாது, அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிப்பதற்குக் காரணம் பிரசாந்த் கிஷோரா..? என்னதான் நடக்குது இங்கே?

இப்போது எந்த ஒரு கட்சி தேர்தலில் ஜெயித்துவிட்டாலும், உடனடியாக பிரசாந்த் கிஷோரை சுட்டிக் காட்டத் தொடங்கிவிட்டார்கள்.


ஆம், ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்தது பிரசாந்த் கிஷோரின் டீம் என்பதுதான் இன்றைய ஹாட் டாபிக். மோடியை குஜராத்திலும், முதல் முறை பிரதமராகவும் உட்கார வைத்ததில் பிரசாந்த் கிஷோருக்கு பங்கு உண்டு. அதேபோல் பீகாரில் நிதிஷ்குமாரை ஜெயிக்க வைத்தார். அதனால்தான், அவருக்கு கட்சிப் பதவியே வழங்கப்பட்டது. சமீபத்தில் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியை ஜெயிக்க வைத்ததும் பிரசாந்த் கிஷோர்தான் என்று சொல்கிறார்கள்.

அதேபோன்று இப்போதைய ஆம் ஆத்மியின் வெற்றிக்கும் பிரசாந்த்கிஷோர்தான் காரணம் என்கிறார்கள். இதை உறுதி செய்வதுபோல் பிரசாந்த் கிஷோர், ‘இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்ற உறுதுணையாக நின்ற டெல்லி மக்களுக்கு நன்றி’ என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் ஸ்டாலினுக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது. எப்படியோ தன்னையும் வரும் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் ஜெயிக்க வைத்துவிடுவார் என்று பெருத்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.