காஞ்சி கலெக்டரின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றும் போலீஸ்! அத்திவரதர் தரிசன ஊழல் அம்பலம்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஒரு காவல் ஆய்வாளரை,பொதுமக்கள் முன்னிலையில் ஒருமையில் திட்டுகிற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


அந்த போலீஸ் அதிகாரிக்கு ஆதரவாகவே பல காவல் துறையினரும் பேசுகிறார்கள்.ஜூலை ஒன்றாம் தேதி அத்திவரதர் வைபவம் தொடங்கியதில் இருந்தே ஆட்சியர் பொன்னையாவுடன் அறநிலையத்துறை, மற்றும் காவல் துறையினருக்கு மனகசப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலர் பனீந்தர ரெட்டியிடம் அனுமதி பெற்று தமிழகமெங்கும் இருந்து 50க்கும் மேற்பட்ட  ஊழியர்களை அழைத்து வந்து கோவிலையே தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர் அறநிலையத்துறை ஊழியர்கள்.

போலீசும்,ஆட்சியர் தலைமையிலான வருவாய்துறைக்கும் கோவிலுக்கு வெளியேதான் அதிகாரம்.அதில்  வேண்டியவர்களை உள்ளே அனுப்புவதில் இப்படி அடிக்கடி சின்னச் சின்ன முட்டல்கள் தொடர்ந்து நடக்கின்றன.

ஆட்சியர் பொன்னையா அவரே நேரடியாக ஒரு காவல்துறை அதிகாரியை திட்டியதால் கடுப்பான காவல் துறை அதிகாரிகள் சில பொருள் பொதிந்த கேள்விகளை முன் வைக்கிறார்கள். காஞ்சி புரத்தில் உள்ள ஹோட்டல்களில் அதிகபட்சம் 3000க்கு மேல் அறை வாடகை இதுவரைக் கிடையாது.

இப்போது அதே அறைகளுக்கு  பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை வாடகை வசூலிப்பது ஆட்சியருக்குத் தெரியாதா.VIP பாஸ் 3000,vvip பாஸ் 5000ம் என்று லட்சக்கணக்கான பாஸ்கள் விற்கப்படுவது அவருக்குத் தெரியாதா?.குறிப்பிட்ட சில பட்டு ஜவுளி கடைகளுக்கு மட்டும் நூற்றுக்கு மேல் பாஸ் கிடைத்தது எப்படி.மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியை வி.ஐ.பி தரிசன வழியில் அனுமதித்தது யார்?

என்று அவர்கள் கேட்கும் கேள்விகளின் பின்னால் இருக்கும் பணமதிப்பு ஆயிரம் கோடியைத் தாண்டும்.பொன்னையா கன்ஃபர்டு ஐ.பி.எஸ் அதிகாரி.எட்டு வழிச்சாலை பிரட்சினை உச்சத்தில் இருந்தபோதுதான் பொன்னையா ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.அதற்கு முன் அவர் உதவி கலக்ட்டர்,ஆர்.டி.ஓ.டி.ஆர் ஓ போன்ற பல பதவிகளை வகித்தவர்.

அங்கெல்லாம் லேசாகத் தோண்டினாலே அவர் எவளவு கடமை தவறாத, நேர்மையான அதிகாரி என்பது தெரிந்து விடும்.நாள் முழுவதும் இரவு பகலாக பணியாற்றும் காவலர்களிடம் இவளவு கடுமை காட்ட வேண்டுமா என்கிறார்கள்.அத்தி வரதா என்னப்பா இப்படி வரிசையா வருது?.