ரஜினி அரசியலுக்குள் வந்தாச்சு..! பின்னே இருப்பது குருமூர்த்தியா?

பணம், புகழ் போன்றவை ரஜினிக்கு இனி புதிதாக தேவையில்லை. ஏனென்றால், அளவுக்கு மீறி அவரிடமே உள்ளது.


பதவி இருந்தால்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியுமா என்ற யோசனையும் அவரிடம் இருக்கிறது. இப்படி யோசித்துக்கொண்டே இருந்தவரை, துக்ளக் விழா மூலம் அரசியலுக்குள் நுழைய வைத்துவிட்டார் குருமூர்த்தி என்பதுதான் இப்போதைய பரபரப்பு தகவல்.

ஏனென்றால், அன்றைய மீட்டிங்கில் அவருக்கு துக்ளக் சார்பில் எழுதிக்கொடுத்ததைத்தான் பேசி இருக்கிறார். அதனாலே ரஜினி பேசிய கருத்துக்கு ஆதரவாக துக்ளக் இதழில் குருமூர்த்தி ஒரு கட்டுரை வெளியிட்டு உள்ளார். அந்தப் புத்தகத்தில் இந்துக் கடவுள்களின் ஆபாச படங்கள் இடம் பெற்றுள்ளதே தவிர, அது எந்தப் பத்திரிகையில் வந்தது என்ற தகவல் இல்லை. 

மேலும், ஊர்வலத்தில் ராமர் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்ட படமும் இடம் பெற்றுள்ளது. துர்வாசர் பெயரில் ரஜினிக்கு ஆதரவாக பேசியிருக்கும் குருமூர்த்தி, பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன், நிர்வாண இந்துக் கடவுள்களை பெரியார் செருப்பார் அடித்த சம்பவங்கள் நடைபெற்றதாக கூறுகிறார்.

இப்போது அவுட்லுக் பத்திரிகையை படித்துத்தான் பேசினேன் என்று, தன்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறார் ரஜினி. இதைத்தான் ரஜினியிடம் குருமூர்த்தியும் பா.ஜ.க.வும் எதிர்பார்க்கிறது. மறுப்பு தெரிவிக்காத ரஜினி இனி அரசியலுக்குள் வரவேண்டிய காலத்தின் கட்டாயம்.