பிரசவத்துக்கு துடிக்கும் கர்ப்பிணிக்கு எபிடியூரல் அவசியம்தானா?

பிரசவ வலியை குறைப்பதில் எபிடியூரல் அனஸ்திசியாவுக்கு முக்கிய இடம் உண்டு. உலகம் முழுவதும் வலியை குறைப்பதற்கு எபிடியூரல் பயன்படுத்தப்படுகிறது. மருத்துமனையில் பிரசவம் மேற்கொள்ளும் பெண்களில் 50 சதவிகிதம் பேர் எபிடியூரல் அனஸ்திசியா விரும்புகிறார்கள்.


·    முதுகுத் தண்டுவடத்தில் போடப்படும் இந்த எபிடியூரல் ஊசியின் மூலமாக உடலின் கீழ்பாகம் மரத்துப்போகிறது என்பதால், பிரசவ வலியை கர்ப்பிணி உணரமுடியாது. கர்ப்பிணியின் விருப்பத்தின் பேரில்தான் இது பயன்படுத்தப்படும்.

·    முதுகுத்தண்டின் மத்தியில் ஊசி வழியே எபிடியூரல் கதிட்டர் என்ற சன்னமான பிளாஸ்டிக் குழாய் நுழைக்கப்படும். பின்னர் ஊசியை எடுத்துவிட்டு குழாயின் வழியே மருந்து கொடுத்து பரிசோதனை நடத்தப்படும். பக்கவிளைவுகள் இல்லையென்றால் தேவையான அளவு மருந்து செலுத்தப்படும்.

·    எபிடியூரல் பொருத்தப்பட்ட பிறகு எழுந்து நடக்கமுடியாது. கர்ப்பிணி அமைதியாக தன்னுடைய பிரசவத்தை வேடிக்கை பார்க்கலாம். கர்ப்பப்பை சுருங்கி விரிந்து குழந்தை வெளியே வரும் வரை வலியே தெரியாது.

·    குழந்தை பிறந்ததும் எபிடியூரல் மருந்து கொடுப்பது நிறுத்தப்படும். அத்துடன் தண்டுவடத்தில் சொருகப்பட்ட கதீட்டர் அகற்றப்பட்டுவிடும்.

பயிற்சி பெற்ற மருத்துவர்கள், போதிய மருத்துவ வசதிகள் அடங்கிய முழுமையான மருத்துவமனையில் மட்டுமே எபிடியூரல் பயன்படுத்த முடியும். இதனால் தலைவலி, முதுகுவலி போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றாலும் பிரசவ வலியுடன் ஒப்பிடும்போது இதையே கர்ப்பிணிகள் தேர்வு செய்கிறார்கள்.