பிரேமலதாவுக்கு வாக்கு கொடுத்தாரா எடப்பாடி..? எம்.பி. பதவி சர்ச்சை ஆரம்பம்!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘‘தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து இதுவரை பேசவில்லை.


 கூட்டணி அமைத்தபோது இதுபற்றி பேசியதுதான். அதன்பிறகு ஏதும் பேசவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்’’ என்று கூறியிருக்கிறார்.

இந்த விஷயம்தான் அ.தி.மு.க.வின் காதில் புகை வரவழைத்துள்ளது. ஏனென்றால், கடந்த நாடாளுமன்ற கூட்டணியின் போதே, பிரேமலதா அப்படியொரு கோரிக்கை வைத்தது உண்மைதான். ஆனால், அதனை அ.தி.மு.க. ஏற்கவே இல்லை.

அப்படியிருக்கும்போது, மீண்டும் அந்த கோரிக்கையை ஏன் ஞாபகப்படுத்துகிறார் என்று கேட்க, பிரேமலதாவோ, ‘எடப்பாடி அப்படித்தான் வாக்கு கொடுத்தார்’ என்று சொல்கிறாராம். ஆனால், இப்போதைக்கு அ.தி.மு.க.வில் எம்.பி.க்களுக்கு ஆட்களை தேர்வு செய்துவிட்டார்கள் என்றே சொல்லப்படுகிறது.  

அதன்படி இப்போது, அதிமுகவின் விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், சசிகலா புஷ்பா, திமுகவின் திருச்சி சிவா, டி.கே.ரங்கராஜன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அதனால், இந்த பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இப்போதைய நிலையின்படி தி.மு.க.வுக்கும் அ.தி.மு.கவுக்கும் தலா 3 சீட் கிடைக்கும். இதில் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை, நத்தம் விஸ்வநாதன், கே.பிமுனுசாமி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது.