மண்ணு, பொண்ணைவிட உயிர் முக்கியம் பாஸ்... ஜாதிக் கொலைக்கு வக்காலத்து வாங்குகிறதா திரௌபதி?

திரௌபதி படத்தை தியேட்டரில் திரையிட விட மாட்டார்கள். ஆனால், சி.டி. போட்டு வீடு வீடாக கொண்டுவந்து தருவேன்’ என்று எழுச்சு பொங்க பேசிவருகிறார் இயக்குனர் மோகன். இவர், பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தை இயக்கியவர்.


கிரௌடு பண்டிங் முறையில் பணம் வசூல் செய்து திரௌபதி படம் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் நாடகக் காதலை அம்பலப்படுத்தி இருக்கிறாராம். அதை சொல்லும் வகையில்தான் டிரெய்லர் அமைந்துள்ளது. அதாவது காதல் என்று ஏமாற்றி கூட்டிச் செல்பவர்களை பிடித்து வெட்டா வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் உட்கருத்தாம்.

அதனால்தானோ என்னவோ, நான் இந்தப் படத்தின் முதல் காட்சியை பார்த்தே தீரவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். இந்தப் படம் வெளியானால் தியேட்டர்களில் பிரச்னை வரும், இயக்குனருக்கு சிக்கல் வரும் என்பதால், பா.ம.க. சார்பில் சட்டப் பாதுகாப்பு கொடுக்க பா.ம.க. முன்வந்துள்ளது. 

நல்ல கருத்தை சொல்லியே ஆகவேண்டும் என்று படம் எடுப்பவர் பலர், எப்படியாவது பிரச்னைக்குரிய விஷயங்களைப் பேசி பரபரப்பாக வேண்டும் என்று படம் எடுப்பவர்கள் சிலர். அவர்களில் ஒருவர்தான் மோகன். வெளிவருவதற்கு முன்பே இத்தனை பில்டப் கொடுப்பதை பார்த்தால்..?

அதையும் பார்த்துவிடுவோம்.