அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆபத்து நீங்கிவிடுமா..? டிரம்ப் அதிரடி என்னாகும்..?

இந்தியாவை மிரட்டுவதும், உருட்டுவதும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பொழுதுபோக்கு என்றுதான் சொல்லவேண்டும். மாத்திரை வாங்கும்வரை மிரட்டுவார், வாங்கியபிறகு பாராட்டுவார்.


அப்படித்தான் திடீரென எச்-1பி விசாவில் அமெரிக்காவில் இருக்கும் அத்தனை இந்தியர்களுடம் உடனே வெளியேற வேண்டும் என்று டிரம்ப் உத்தரவு போட்டார். அவ்வளவுதான் அத்தனை பேரும் ஆடிப் போனார்கள். ஏனென்றால், அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று சுமார் 3 லட்சம் இந்தியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து இந்திய அதிகாரிகள், அமெரிக்க அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அத்னவிளைவாக, எச்-1பி விசாவில் அமெரிக்காவில் பணியாற்றுவோர், வேலை இழந்தாலும் 8 மாதங்கள் வரை தங்கியிருக்கவும் அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றுப் பிரச்னை முடியும் வரையிலும் இந்தியர்களுக்கு எந்த இடையூறும் செய்யவேண்டாம் என்று அமெரிக்காவை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை அமெரிக்காவே மதிக்குமா என்பதுதான் தெரியவில்லை.