தொடர்ந்து அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கொரோனாவிடம் சிக்கி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் வளர்மதியும் சிக்கிட்டாங்களே!

கொரோனாவெல்லாம் பணக்காரங்களுக்கு வரும் வியாதி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னது சரியாப் போச்சு, இப்போது தொடர்ந்து அ.தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் சிக்கி வருகிறார்கள்.


இதுவரை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் அதிரடி பெண் அரசியல்வாதியாக அறியப்பட்டவரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்று உறுதியாகியிருக்கும் நிலையில், பா.வளர்மதி போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை ஆளும் கட்சியில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி, உளுந்தூர் பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணன், உயர்க்கல்வித்துறை அமைச்சரும் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.பி.அன்பழகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவில், கொரோனா தொற்றால் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்தார். மேலும், திமுகவில் செஞ்சி மஸ்தான், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் எம்.எல்.ஏ ஆர்.டி. அரசு ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.