ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சிக்கு வருகிறதா காங்கிரஸ்? அதிர்ச்சியில் மோடி!

நாடாளுமன்ற வெற்றிக்குப் பிறகு, இனிமே அசைக்க யாருமே இல்லை, எதிர்க் கட்சியும் இல்லை என்று தெனாவெட்டாக இருந்த மத்திய அரசுக்கு மகாராஷ்டிரா தேர்தலில் பெரும் அடி கிடைத்தது.


அதில் இருந்து எழுவதற்குள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு நிலவுகிறது. இப்போது திங்களன்று எண்ணப்பட இருக்கும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றுதான் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் சுமார் 70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. உடனடியாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டன.

41 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சியே ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நிலையில், தொங்கு சட்டமன்றமே இருக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு அதிகப்படியாக 35 தொகுதிகளும் பா.ஜ.க.வுக்கு 31 தொகுதிகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐ.ஏ.என்.எஸ். நடத்திய கருத்துக் கணிப்பிலும் பா.ஜ.க.வுக்கு அதிகபட்சம் 36 இடங்களும் காங்கிரஸ்க்கு 39 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாக ஜார்கண்கண்ட் மாணவர் பேரவை திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.