காந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க.! மோடிக்கு ரூட் போட்டுக் கொடுக்கும் சுவாமி.

மோடியின் ஆட்சிக்கு கடும் எதிரி என்றால் இரண்டே பேர்தான். அவர்கள் காந்திஜியும், பண்டித நேருவும்தான்.


அதனால்தான், கடந்த ஆட்சியின்போது, நாட்டில் நடந்த அத்தனை பிரச்னைகளுக்கும் நேருவை காரணம் காட்டினார்கள். காந்தியை பா.ஜ.க. தலைவி ஒருத்தி சுட்டுக்கொல்வதாக நடித்தே காட்டினார். காந்தி வழி இன்றைய உலகத்திற்கு ஒத்துவராது என்று மோடியே சொன்னார். அந்த வகையில், ரூபாய் நோட்டில் இருந்து காந்தியை அகற்றுவதற்கு வழி காட்டியிருக்கிறார் சுப்பிரமணியம் சுவாமி.

ஆம், இந்து மதக் கடவுளான லட்சுமியின் படத்தை ரூபாய் தாள்களில் அச்சிட்டால் இந்திய ரூபாயின் மதிப்பு மேம்படும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

அதாவது காந்தியின் படத்தை எடுத்துவிட்டு லட்சுமியின் படத்தைப் போட வேண்டும் என்பதுதான் சுப்பிரமணிய சுவாமியின் ஆலோசனை. இதுதான் இன்றைய இணையத்தில் வைரலாகப் போகிறது. சினிமா நடிகை லட்சுமியில் இருந்து சகல லட்சுமிகளையும் போட்டு ரூபாய் நோட்டு வெளியிட வேண்டும் என்று கிண்டல் செய்கிறார்கள்.

அதாவது பொருளாதார மந்தத்தில் இருந்து மீள வேண்டும் என்றால், லட்சுமி படத்தைப் போட வேண்டுமாம். இந்த லட்சணத்தில் தன்னை பொருளாதார மேதை என்று வெட்கமே இல்லாமல் சொல்லிக்கொள்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. 

அவரது ஆலோசனை படி காந்தியை தூக்குவதற்கு மோடி தயாராகத்தான் இருப்பார். ஆனால், லட்சுமி படத்திற்குப் பதிலாக மோடியின் படத்தையே போட்டுக்கொள்ளத்தான் ஆர்வமாக இருப்பார். கண்ணாடியை திருப்பியாவது ஆட்டோ ஓடினால் சரிதான் என்பதுதான் மோடியின் மனநிலை.