பிரபல பாடகியுடன் தகாத உறவு! காதல் மனைவியை பிரிந்த நடிகர்!

ஹாலிவுட்டின் பிரபலமான "எ ஸ்டார் இஸ் பார்ன்" திரைப்படத்தை இயக்கிய பிராட்லி கூப்பரும், அவரின் காதலி ஐரினா ஷேக்கும் பிரிந்துவிட்டனர்.


"எ ஸ்டார் இஸ் பார்ன்" இயக்குனர்  பிராட்லி கூப்பரும், அவரின் காதலி ஐரினா ஷேக்கும் திடிரென்று பிரிந்துவிட்டனர்.  இந்த தகவலை அறிந்த இவர்களது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை அடைந்து உள்ளனர். 

ஹாலிவுட்டின் பிரபலமான நடிகரும், இயக்குநருமான பிராட்லி கூப்பர், பிரபல மாடலான ஐரினா ஷேக் என்பவரை கடந்த 4 ஆண்டு காலமாக காதலித்து வருகின்றனர். அதாவது 2015 முதல் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர்.  இதனையடுத்து இவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு லீ டீ ஷேன் ஷெய்க் கூப்பர்  என்ற பெண் குழந்தை பிறந்தது.

சமீப காலமாகவே பிராட்லிக்கும் ஐரீனுக்கும் இடையில் சில மனகசப்பான சம்பவங்கள் நடந்தை அடுத்து தற்போது இவர்கள் இருவரும் பிரிய முடிவு எடுத்து,  பிரிந்து விட்டனர். இவர்களுடைய 2 வயது பெண் குழந்தைக்காக இவர்கள் சேர்ந்து வாழவார்கள் என எதிர்பார்த்த இவர்களது ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது என்றே கூற வேண்டும்.

தற்போது இந்த ஜோடியின் பிரிவிற்கு யார் காரணம் என்று இவர்களது ரசிகர்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.  ஆஸ்கர் விருது விழா கடந்த  பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த விருது விழாவில் பிராட்லி கூப்பரும், பாடகியும், நடிகையுமான லேடி காகாவும்  நெருக்கமாக இணைந்து பாடல்களை பாடி அசத்தினார்கள்.  அதை பார்த்த ரசிகர்கள், இவர்களின் நெருக்கத்தை பார்த்தால் இவர்கள் இருவரும் காதல் வசப்பட்டது போல் தெரிகிறது என பேசினார்கள்.

இதற்கிடையில்  லேடி காகாவும், தன்னுடைய காதலரான கிறிஸ்டியன் கரினோவை ஆஸ்கர் விழா முடிந்த உடனே பிரிந்து விட்டார்.  ஒரே நேரத்தில்  பிராட்லி கூப்பரும் அவரது காதலியை பிரிந்து விட்டார், அதே போல்  லேடி காகாவும் தன்னுடைய அன்பு காதலரை பிரிந்து விட்டார்.  இந்த சம்பவம் தான் ரசிகர்கள் மத்தியில் உண்டான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

இதனால் தான் நெட்டிசன்கள் பிராட்லி கூப்பரும் லேடி காகாவும் காதலித்து வருகின்றனர்.  ஆகையால் தான் இருவரும் தங்களது  காதலர்களை பிரிந்து உள்ளனர் என்று கண்ட படி கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ரசிகர்களின் இந்த கமென்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த லேடி காகா, "மேடையில் ஒன்றாக சேர்ந்து பாட்டு பாடினால் நாங்கள் காதலராக தான் இருக்க வேண்டுமா?" என்று கோபத்துடன் நக்கலாக பேசிய ரசிகர்களுக்கு பதிலடி தந்தார்.