IPL தொடரிலிருந்து வெளியேற போவது கொல்கத்தாவா? ராஜஸ்தானா? இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கவுள்ளது.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை ரஸ்ஸல், ராணா சிறப்பாக விளையாடி வருகின்றனர். கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவது கவலையாக உள்ளது.பந்து வீச்சை பொறுத்தவரை எவரும் சிறப்பாக செயல்படுவதில்லை. இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ள நிலையில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே எந்த தடையுமின்றி பிலே ஆஃப்  செல்லலாம்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில உள்ளது. இவர்கள் மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம். மற்ற அணியினரின் நெட் ரன் ரேட்டை பொறுத்து தான் முடிவு செய்ய முடியும்.

 

ஆகவே இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றால் தொடரிலிருந்து வெளியேறுவது உறுதி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அதிகமா இருக்கும். ஆகையால் இந்த போட்டியில் இரு அணிகளும் தங்களது முழு பலத்துடன் விளையாடும் என்பதில் சந்தேகம் இல்லை.