முடி வளரலனு கவலையா? இந்த காய்கறிகளை சாப்பிடுங்க!

கூந்தல் பிரச்சனைகளை போக்குவதற்கு ஒருசில உணவுகள் உள்ளன. அதில் புரோட்டீன் உணவுகள் முக்கியமானவை. எனவே அத்தகைய புரோட்டீன் உணவுகளை உண்டால், புரோட்டினால் உருவான கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக வளரும். உறுதியான, நீளமான கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை இயற்கையான பொருட்களை கொண்டு எப்படி பெறலாம் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.


முடி வளர்ச்சிக்கு பூண்டுச்சாறினை முடியின் வேர்க்கால்களில் படும்விதமாக தேய்த்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். கேரட் சிலவற்றை வேக வைத்து அரைத்து அதில் வேக வைத்த தண்ணீரைக் கலந்து தலை முடியில் தேய்க்கவும் 30 நிமிடத்திற்கு பின் முடியை அலசவும். 

அனைவருக்குமே முட்டையில் தலை முதல் கால் வரை வேண்டிய சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளது என்பது தெரியும். எனவே இதனை தினமும் 1-2 சாப்பிட்டு வந்தால், கூந்தலுக்கு நல்லது. கொத்தமல்லிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு அதை பிழிந்து  அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதை தலையில் தேய்த்து ஒரு மணி நேர ஊறவைத்துப் பின் முடியை அலசி வரவேண்டும். இப்படி வாரம் 3 முறை செய்து வந்தால் முடி கொட்டுவது குறைவதுடன் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். 

கேரட் சிலவற்றை வேக வைத்து அரைத்து அதில் வேக வைத்த தண்ணீரைக் கலந்து தலை முடியில் தேய்க்கவும் 30 நிமிடத்திற்குப் பின் முடியை அலசவும். கேரட்டில் விட்டமின் சி உள்ளதால் அது முடியின் வேர்களுக்கு பலத்தை கொடுக்கும்.