டிக் டாக், இந்தியர்களின் சொர்க்கமும், நரகமும் இதுவேதான். உஷார் ரிப்போர்ட்!

டிக் டாக். இது மேட் இன் சீனாவாகவே இருந்தாலும். இன்றைய இந்தியர்களின் சொர்க்கபுரி கனவு தேசம் என்றுதான் கூற வேண்டும்.


2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பொழுதுபோக்கு அப்ளிகேஷன். உலகம் முழுவதும் சுமார் 75 மொழிகளில் பயன்பாட்டில் உள்ள இந்த செயலியின் மூலம். ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் மூன்று வீடியோக்கள் புதிதாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் சுமார் 1.5 கோடி பேர் இந்த செயலி மூலம் ஒரு நிமிடத்திற்கு 2 வீடியோக்களையும். 80 லட்சம் பேர் 30 வினாடிக்கு இரண்டு வீடியோக்களையும். 1 கோடியே 20 லட்சம் பேர் நாள் தவறாமல் புதிய வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

பொழுதுபோக்கிற்காக தொடங்கப்பட்ட இந்த டிக்டாக் செயலி மூலம் இந்தியாவில் பல ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மேலும் பல குடும்பங்களின் விவாகரத்து மற்றும் பிரிவினைகள் ஏற்பட்டு ஒழுக்கக்கேடான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

பொதுவாகவே இந்தியர்கள் நவநாகரீக கலாச்சாரங்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை கொண்டவர்கள் என்ற கருத்து உண்டு.. நாகரீக கலாச்சாரம் என்கிற பெயரில் பாரம்பரிய உணவுகளையும். பாரம்பரிய உடைகளையும் அணிய மறந்ததன் காரணமாக.! பல்வேறு இடங்களில் தற்போது பாலியல் குற்ற சம்பவங்கள் பெருகி வருவதை காணமுடிகிறது. 

மேலும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கங்களால் தனிமனித மருத்துவ செலவினங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது கடந்த 10 ஆண்டுகளில். மேற்கத்திய கலாச்சாரத்திற்கு அடிமையாகியுள்ள இந்திய மக்களின் எண்ணம். தற்போது சீனாவின் பொழுதுபோக்கு அப்ளிகேஷனில் மூழ்க தொடங்கியுள்ளது.

நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் அலைபேசியில் பல்வேறு தரப்பட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை பெற்றுள்ளது இன்றைய நவீன உலகம். இந்த வேலையில் டிக் டாக் செயலியால் தற்போது பூதாகரமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு பலர் சிறையில் தள்ளப்பட்டு வருகின்றனர்.

இது பொழுதுபோக்கு அப்ளிகேஷனாகவே இருந்தாலும். இன்றைய பல இளைஞர்களின் பொழுதை வெட்டியாக போக்குவதற்கு காரணமாக அமைகிறது. அதேவேளையில் சில உயிர்களை பழிவாங்கவும் காரணமாக அமைந்துள்ளது இந்த டிக் டாக் அப்ளிகேஷன்.

கடந்த சில நாட்களாக இந்த செயலியை உபயோகப்படுத்தி வீடியோ எடுக்கும் பலர் அதன் ஆபத்தை உணராமல் மரணமடைந்துள்ளதை நேரடியாகவே கண்டு வருகிறோம்.

பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தில் நின்று டிக்டாக் செயலி வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போது பின்னால் வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். அதன் காரணமாக இதுபோன்ற டிக்டாக் செயலி மற்றும் செல்ஃபி எடுக்க ரயில் நிலையங்களில் தடை விதித்தது இந்திய ரயில்வே துறை.

ஆனால் இந்த அறிவிப்பு வந்த பிறகுதான் பொது இடங்களில் எதிர்பாராத மரணங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் ஆந்திராவில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர். கோயம்புத்தூரில் மருமகனை வெட்டி கொன்ற மாமனார். ஏரியில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள் என தினம் ஒரு மரணத்தை கண்டு வெற்றிகரமாக பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த டிக்டாக் செயலி

பொதுவாகவே பொழுதுபோக்கு என்பது மனிதனின் மூளையை புத்துணர்ச்சியாக்கவே பல நேரங்களில் தேவையாயிருந்தது.  ஆனால். தற்போதைய சூழலில் புத்துணர்ச்சியை விட புகழின் அடிமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் நவீன தொழில்நுட்ப இந்தியர்கள். இவர்கள் எடுக்கும் வீடியோக்களுக்கு பார்வையாளர்கள் பதிவிடும் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களுக்காகவே பலர் மூழ்கியுள்ளனர் தங்களது பொன்னான நேரத்தை வீணாக்கி.

இந்தப் பொழுதுபோக்கு செயலி 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் ஆண்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருப்பவர்களில் 70% பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளதாக அறியமுடிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த டிக்டாக் செயலி மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000தை தாண்டுகிறது.

உயிர்பலி மட்டுமின்றி. குடும்ப பிரச்சினைகள். சமூகம் சார்ந்த எதிர்வினைகள் பலவாறாக பகிரப்பட்டு வருகிறது இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலம். கடந்த ஆண்டு இந்தியாவில் இந்த செயலிக்கு தடை விதித்திருந்த உச்சநீதிமன்றம். சில கட்டுப்பாடுகளுடன் தடையை தளர்த்தி மறுபடியும் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

ஆனால். அதற்குப் பிறகான பயன்பாடுகள் என்பது இந்திய மக்களிடையே எதிர்வினையை ஆற்றி வருகிறது. பொழுதுபோக்கு மொபைல் அப்ளிகேஷன் என்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி. இன்றைய இளைஞர்களிடையே சாதி மத வன்மத்தை பரப்பும் பிரச்சார ஆயுதமாக மாறி இருக்கிறது.

திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு சிறுவன் இந்த செயலி மூலம் சாதிய பிரிவினை பற்றிப் பேசியதும். அதற்குப் பிறகு அவனை பள்ளியை விட்டு நீக்கி ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததும் நெடுங்கதை.

திருமணமான பெண் ஒருவர் இந்த செயலி மூலம் ஏற்பட்ட பெண் நண்பரோடு வீட்டை விட்டு ஓடியதும். தற்போது கூட நடுத்தர பெண்மணி ஒருவர் இந்த செயலியை உபயோகப்படுத்த முடியவில்லை என்று கண்ணீர் விட்டு அழுத கதையையும் பார்த்து பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த நவ நாகரீக சமூகம்.

டிக் டாக் நிறுவனம் கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் சுமார் 62,000 கோடி நிகர லாபத்தை சம்பாதித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 51 ஆயிரம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் குறிப்பிடத்தக்க வருமானம் இந்திய இளைஞர்கள் உபயோகப்படுத்தும் இன்டர்நெட் மூலமாகவே வந்துள்ளதாக தெரிவிக்கிறது டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பெய்டி டான்ஸ். 

இதை பதிவிறக்கம் செய்வதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆனால் இதை உபயோகப்படுத்துவதற்கு இன்டர்நெட் கண்டிப்பாக உபயோகத்தில் இருக்க வேண்டும். அப்படி இந்த செயலி மூலம் கழிக்கப்படும் இன்டர்நெட்டின் வேகத்துக்கு இணையான பணத்தை இந்த நிறுவனத்திற்கு செலுத்தி வருகின்றன இன்டர்நெட் சேவையை வழங்கிவரும் தொலைதொடர்பு நிறுவனங்கள்.

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை 7 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்திய பொருளாதாரம் 7 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த துறைகளும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு வேகமாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதில் தொலைத்தொடர்பு துறையும் ஒன்று.

ஆனால் தொலைத்தொடர்பு இன்டர்நெட் மூலமாக பயன்படுத்தப்படும் ஒரு மொபைல் அப்ளிகேஷன் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை லாபத்தை மட்டுமே கண்டு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடிக்கு மேல் லாபத்தை சம்பாதித்துள்ளது இந்த டிக் டாக் அப்ளிகேஷன்.

மணியன் கலியமூர்த்தி