இந்தியர்கள் இனி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள முடியாது..! விரைவில் வருகிறது அதிரடி சட்டம்?

லக்னோ: இந்தியர்கள் 2 குழந்தை பெற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.


உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இதனை கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றி, இந்தியர்கள் ஒவ்வொருவரும் 2 குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளாமல் இருக்க, கண்டிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் அவர் கூறுகையில், ''ஒவ்வொரு வீட்டிற்கும் 2 குழந்தைகளுக்கு மேல் பெறுவதை நிறுத்தினால்தான், இந்தியா வளர்ச்சிபெறும். அத்தகைய சட்ட நடவடிக்கையை கண்டிப்பாக ஆர்எஸ்எஸ் என்றைக்குமே வரவேற்கும். இதுபோல, ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை நிறுவப்படும்பட்சத்தில் அத்துடன் ஆர்எஸ்எஸ் ராமர் கோயில் விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளும்.

அத்தகைய அறக்கட்டளை ஏற்படுத்தப்படும் வரையிலும் ஆர்எஸ்எஸ் ராமர் கோயில் விவகாரத்தில் தொடர்ந்து அக்கறை காட்டும்,'' என்றும் தெரிவித்துள்ளார்.