இந்த ஆண்டுக்கான மிஸ் இங்கிலாந்து போட்டியில் வென்ற இந்தியப் பெண்! அவரது ஐ.க்யூ. லெவல் தெரியுமா?

ஒருகாலத்தில் இந்தியாவை மட்டுமல்லாமல் பாதி உலகை ஆண்ட இங்கிலாந்து,இப்போது சொந்த நாட்டிலேயே பல பெருமைகளை மற்றவர்களிடம் இழந்து வருகிறது.


குறிப்பாக இந்தியர்களிடமும் பாக்கிஸ்தானியரிடமும்.அவர்களின் கிரிக்கெட் அணியில் ஸ்டார் பெளலர் ஒரு பாக்கிஸ்தானியர்.லண்டன் நகரின் மேயர் ஒரு பாக்கிஸ்தானியர்.போரிஸ் ஜாண்சன் அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் ஒரு பாக்கிஸ்தானியர், மூன்றாமிடத்தில் ஒரு இந்தியப் பெண்.இது தவிர இன்னும் இரண்டு இந்தியர்கள் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் நேற்று நடந்த அழகிப் போட்டியில் ' மிஸ் இங்கிலாந்தாக' வென்றிருக்கிறார் ஒரு இந்தியப் பெண்.சாதாரணப் பெண்னல்ல மருத்துவத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றிருக்கும் ஒரு டாக்டர்!. இப்போது இங்கிலாந்தின் டெர்பி நகரில் வசிக்கும் பாஷா முகர்ஜியின் ஐக்யூ 146! ஒன்பது வயதில் பெற்றோருடன் இங்கிலாந்தில் குடியேறிய பாஷாவுக்கு ,பெங்காலி,இந்தி,ஃபிரஞ்ச்,ஜெர்மன் உட்பட ஐந்து மொழிகள் தெரியும்.

23 வயதாகும் பாஷா முகர்ஜிக்கு கடந்த வியாழக்கிழமை வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்.மிஸ் இங்கிலாண்ட் போட்டியில் கிரீடம் சூட்டிக்கொண்ட உடனே, அடுத்த மெட்ரோவைப் பிடிக்க கிளம்பிவிட்டார்.லின்க்கன் ஷையரில் இருக்கும் பாஸ்ட்டன் நகர் மருத்துவ மனையில் விடியற்காலம் முதல் ஷிப்டில் ஜூனியர் டாக்டராக பொறுப்பேற்க வேண்டி இருந்ததால்.இது பற்றிப் பேசும்போது ' எனக்கு இந்த அழகிப் போட்டிகளில் கலந்து கொள்வதில் ஆரம்பத்தில் நிறையத் தயக்கம் இருந்தது.

ஆனால்,படிப்பைத் தவிர வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்பதால்,பள்ளி இறுதி ஆண்டுகளிலேயே இதில் கவனம் செலுத்தினேன்' என்று சொல்லும் பாஷா முகர்ஜிதான் அடுத்த உலக அழகிப் போட்டியில் இங்கிலாந்தின் பிரதிநிதியாகப் பங்கேற்க போகிறார்.146 ஐக்யூ லெவல் உள்ள அழகி இந்திய சினிமாவுக்கு வந்து அமீர்கானுடனோ,அஜித்துடனோ நடனமாட மாட்டார் என்று நம்புவோம்.