ராணுவ தொப்பி! மைதானத்தில் கெத்து காட்டிய இந்திய வீரர்கள்!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் பீல்டிங் செய்யும் போது ராணுவ தொப்பி அணிந்து வந்தனர்.

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் பீல்டிங் செய்யும் போது ராணுவ தொப்பி அணிந்து வந்தனர்.

 கடந்த மாதம் புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த 40கும் மேற்பட்டவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்திய அணியினர் இந்த ராணுவ தொப்பி அணிந்து விளையாடி வருகின்றனர். இது இந்திய ரசிகர்கள் பெரிதும் ஈர்த்துள்ளது.

மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இன்று நடைபெறுகின்ற போட்டியில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் அவர்களது இந்த போட்டிக்கான ஊதியத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கவுள்ளது. இதன் மூலம் இந்த நீதியானது புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு சென்றடையும்.

ஏற்கனவே ஐபிஎல் தொடக்கவிழா இந்த ஆண்டு செய்யப்பட்டு அதற்கான செலவுகளை புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு அளிக்க உள்ளதாக ஐபிஎல் தலைமை முடிவு செய்துள்ளது.

புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து நிதிகள் குவிந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.