இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒரே ஓவரில் ஆஸ்திரேலியாவின் கதையை முடித்து ஹீரோவான விஜய் ஷங்கர்!

டாஸ் வென்று
பவுலிங்கை தேர்வு
செய்து , இந்திய
அணியை பேட்டிங்
செய்ய பணித்தது.
தொடக்க ஆட்டக்காரராக
களமிறங்கிய ரோஹித்
சர்மா ரன்
ஏதும் எடுக்காமல்
டக் அவுட்
ஆனார். பின்னர்
களமிறங்கிய இந்திய
அணியின் கேப்டன்
விராட் கோஹ்லி
ஆஸ்திரேலியா அணியின்
பந்து வீச்சை
அடித்து துவம்சம்
செய்தார். இவருடன்
விஜய் ஷங்கரை
தவிர எந்த
பேட்ஸ்மேனும் நிலைத்து
நின்று ஆடவில்லை.
சிறப்பாக விளையாடிய
விஜய் ஷங்கர்
46 ரன்கள் எடுத்திருந்த
போது எதிர்பாராதவிதமாக ரன் அவுட்
ஆனார்.
தொடர்ந்து சிறப்பாக
விளையாடிய கோஹ்லி
சதம் அடித்து
116 ரங்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின்
டைல் எண்டெர்ஸ்
வழக்கம் போல
வந்த வேகத்தில்
அவுட் ஆகி
வெளியேறினர். இதனால்
இந்திய அணி 48.2
ஓவர்களில் அணைத்து
விக்கெட்களையும் இழந்து
250 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலியா அணியின்
கம்மின்ஸ் சிறப்பாக
பந்து வீசி
4 விக்கெட்களை வீழ்த்தினார்.
251 ரன்கள் எடுத்தால்
வெற்றி என்ற
இலக்குடன் களமிறங்கிய
ஆஸ்திரேலியா அணியின்
தொடக்க ஆட்டக்காரர்கள்
சிறப்பான தொடக்கத்தை
அமைத்து கொடுத்தனர்.
பின்ச் 37 ரன்களுக்கும், கவாஜா 38
ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். பிறகு களமிறங்கிய
வீரர்களில் ஹண்ட்ஸ்கோம்ப்
மட்டும் சிறப்பாக
விளையாடி48 ரன்களை எடுத்து
ஆட்டமிழந்தார். அந்த
அணியின் ஸ்டாய்னிஸ்
மட்டும் வெற்றிக்காக
போராடினர்..
கடைசி ஓவரில்
ஆஸ்திரேலியா அணி
வெற்றி பெற 11
ரன்கள் தேவைப்பட்டது.
இரண்டு விக்கெட்கள்
கைவசம் இருந்தது
ஆஸ்திரேலியா வசம்.
கடைசி ஓவரை
வீசிய விஜய்
ஷங்கர் தனது
முதல் பந்தில்
சிறப்பாக விலகி
கொண்டிருந்த ஸ்டானிசை
அவுட் ஆக்கினார்.
தனது மூன்றாவது
பந்தில் ஆஸ்திரேலியா
அணியின் கடைசி
விக்கெட்டை வீழ்த்தி
இந்திய அணிக்கு
த்ரில்லிங் வெற்றியை
தேடி தந்தார்.
ஸ்டானிஸ் 52 ரன்களை
எடுத்தார். இந்திய
அணியின் குல்தீப்
யாதவ் 3 விக்கெட்களை
வீழ்த்தினார்.