இந்தியாவின் இரண்டாவது செல்வந்தர், மோடியின் செல்லப்பிள்ளை அதானி! சூப்பரப்பு!

கடந்த ஆண்டு 10வது இடத்தில் இருந்த கவுதம் அதானி ஒரே பாய்ச்சலாக முன்னேறி, முகேஷ் அம்பானிக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருப்பது இந்திய தொழிலதிபர்களை அலற வைத்துள்ளது.


ஆண்டு தோறும் ஃபோபர்ஸ் பத்திரிகை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்திய அளவில் கோடீஸ்வரர்கள் பட்டியலை பார்த்தபோது, வழக்கம்போல் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார். அம்பானியின் சொத்துமதிப்பு கிட்டத்தட்ட 51 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு பத்தாவது இடம் பிடித்திருந்த அதானி இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இவரது சொத்துக்களின் மதிப்பு 15.7 பில்லியனாக இருக்கிறது. கவுதம் அதானியின் வளர்ச்சியும் பா.ஜ.க. வளர்ச்சியும் ஒரே நேரத்தில் நிகழ்வதைக் கண்டு தொழிலதிபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏனென்றால், குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்தபோதுதான், அதானி குழுமம் தன்னுடைய கையை இந்தியா முழுவதும் விரிக்கத் தொடங்கியது. மோடியின் நெருங்கிய நண்பர் என்ற காரணத்தாலே சகல மாநிலங்களிலும் மதிப்பு கிடைத்தது. 

பிரதமராக மோடி பதவியேற்றதும் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் அதானியின் வளர்ச்சி கிடுகிடுவென நிகழ்ந்தது. மின் உற்பத்தி, சமையல் எண்ணெய், நிலக்கரி, கப்பல், ரயில் என்று சகல தொழிலும் அதானி குழுமம் கால் பதிப்பதற்குக் காரணம் மோடிதான் என்பதை சொல்லவே வேண்டியதில்லை.

ஜியோவின் மூலம் முதல் இடத்தில் இருக்கிறார் முகேஷ் அம்பானி. இவரும் மோடிக்கு வேண்டப்பட்டவர் என்பதால், இனி இவர்கள் இருவரும்தான் இந்தியாவை ஆள்வார்கள் என்று சொல்லப்படுகிறது. அசிம் பிரேம்ஜி, இந்துஜா சகோதரர்கள், டாடா போன்றவர்கள் எல்லாம் தூக்கியடிக்கப்பட்டு விட்டார்கள்.