நள்ளிரவில் சென்னை வந்த குண்டு துளைக்காத 4 ராட்சத கார்கள்! ஏர்போர்ட்டில் பரபரப்பு!

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக கருதப்படும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்திப்புக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் நிலையில், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், பயன்படுத்துவதற்காக குண்டு துளைக்க முடியாத 4 சொகுசு கார்கள், நேற்றி இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.


இந்திய – சீன இருநாட்டு சந்திப்பு, வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வு, தமிழகத்தில் உலக புகழ் பெற்ற யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து மாமல்லபுரம் பயணத்திற்காக சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், அவரது குழுவினரும் பயன்படுத்தும் வகையில் குண்டு துளைக்க முடியாத 4 சொகுசு கார்கள் தற்போது சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஸீ ஜின்பிங் , அக்டோபர் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைவர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு சுமார் 2.05 மணிக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து 4 மணி அளவில் மாமல்லபுரத்திற்கு செல்லவுள்ளார்.

இந்த நிலையில், மாமல்லபுரம் பயணத்திற்காக குண்டு துளைக்க முடியாத சொகுசு காரில் அவர் பயணிக்க உள்ளார். சீன அதிபருடன் வரும் குழுவும் குண்டு துளைக்க முடியாத காரில் பயணிக்க உள்ளனர். அதனால் ஹாங்கி எல் 5 என்ற 4 சொகுசு கார்கள், தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹாங்கி எல் 5 என்ற 4 சொகுசு கார்கள் ஏர் சைனா B747 என்ற சரக்கு தனி விமானத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நான்கு கார்களும் நேற்று இரவு 7 மணி அளவில் விமான நிலையத்தில் இறக்கப்பட்டன. 

பின்னர், சென்னை விமான நிலையம் வந்தடைந்த சீன அதிபரின் பாதுகாப்புக் குழுவினர், இந்திய அதிகாரிகளையும் விமான நிலைய அதிகாரிகளையும் சந்தித்து சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை உள்ள பாதுகாப்பு தொடர்பாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கேட்டறிந்தார்.