முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறீங்களா? இதோ உங்களுக்கான ஒரு சிம்பிள் கணக்கு! அப்புறம் பதில் சொல்லுங்க!

ஏழைகள் என்றால் ஏழைகள்தான், அது எந்த சாதியாக இருந்தால் என்ன என்று முன்னேறிய வகுப்பினரின் இட ஒதுக்கீடுக்கு பலர் ஆதரவு தருகிறார்கள்.


நம் வலது கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவிப்பதுதான் ஆச்சர்யம். பொதுவான கருத்தாக இதனை பார்க்காமல், ஒரு சம்பவமாகப் பார்த்தால் இந்த இட ஒதுக்கீட்டின் உண்மை புரியும். பார்க்கலாமா..? முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த ஒருவர் வங்கியில் பணியாற்றுகிறார். அவரது மாத வருமானம், பரிதாபமாக 70 ஆயிரம் மட்டும்தான். அதனால் இவர் இட ஒதுக்கீட்டுக்குத் தகுதி பெற்றவராக இருக்கிறார்.

பின்தங்கிய, பட்டியலின வகுப்பு பிரிவைச் சேர்ந்த சிலர் மாநகராட்சியில் குப்பை அள்ளும், சாக்கடை சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளிகளாக வேலை பார்க்கிறார்கள், அவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் சம்பளம். இந்நிலையில் இவர்களின் பிள்ளைகள் வங்கியில் அலுவலர் வேலைக்கு தேர்வு எழுதுகிறார்கள். முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த வங்கியில் வேலை பார்ப்பவரின் பிள்ளை 30 மதிப்பெண்கள் எடுக்கிறார்.

வங்கியில் சொகுசாக வேலை பார்ப்பவரை விட பதினான்கு மடங்கு குறைவாக சம்பளம் வாங்கும் துப்புரவுத் தொழிலாளிகளின் பிள்ளைகள் 50 மதிப்பெண்கள் எடுக்கிறார்கள். ஆனால் இவர்கள் என்ன சொல்கிறார்கள், இங்கு பாதிக்கப்பட்டவர் வங்கியில் எழுபதாயிரம் சம்பளம் வாங்குபவர்தான், அதனால் அவரின் பிள்ளை துப்புரவுத் தொழிலாளிகளின் பிள்ளைகளை விட பாதி மதிப்பெண் குறைவாக மதிப்பெண் வாங்கினாலும் அவருக்கு வேலை உண்டு,

பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்ததால் நீங்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் உங்களுக்கு வேலை கிடையாது.  இப்போது சொல்லுங்கள், உலகில் எந்த அரசாங்கமாவது இந்த அநீதியைச் செய்யுமா? உலகின் எந்த நீதிமன்றமாவது இதுதான் நீதி என்று சொல்லுமா?