நடிகை ராகிணியுடன் இருக்க ஒரே ஓட்டலுக்கு வந்த 2 ஆண்கள் கட்டிப் புரண்டு சண்டை!

நடிகை ராகினி திவிவேதியுடன் இருப்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் பெங்களூரு நட்சத்திர ஓட்டல் இருநபர்கள் கட்டிப் புரண்டு சண்டையிட்டனர்.


அந்த நட்சத்திர ஓட்டலுக்கு நடிகை ராகினி த்விவேதியுடன் போக்குவரத்துத் துறை கண்காணிப்பாளரான  ரவிசங்கர் மற்றும் அவரது நண்பர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் இரவு 11 மணியளவில் அங்கு வந்த சிவப் பிரகாஷ் என்ற நபர் நடிகையுடன் எவ்வாறு பழக்கம் ஏற்பட்டது. எனக் கேட்டு ரவிசங்கரிடம் தகராறு செய்ததாகவ்வும் அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ரவிசங்கர் காவல் துறையில் அளித்த புகாரில் சிவப்பிரகாஷ் ராகினியுடன் ஏன் வந்தாய் எனக் கேட்டு தன்னிடம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். தன்னை பீர்பாட்டிலால் தலையில் தாக்கியதாகவும் முகத்தில் குத்தியதாகவும் கூறியுள்ள ரவிசங்கர், தன்னை சிவப் பிரகாஷிடம் இருந்து காப்பாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது வாழக்கை அபாயத்தில் இருப்பதாக சிவப்பிரகாஷ் அச்சுறுத்தியதகவும் ரவிசங்கர் கூறியுள்ளார். புகாரின் பேரில் அச்சுறுத்தல் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிவப்பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

இந்நிலையில் சிவப்பிரகாஷ் தரப்பில் நடிகையுடன் நீண்ட நாட்களாக நட்புடன் இருப்பதாகவும் கார் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள்து.

இந்நிலையில் ரவிசங்கரின் வருகைக்குப் பின்னர் நடிகை தன்னை விட்டு விலகுவதாகவும் அலட்சியப்படுத்துவதாகவும் சிவப்பிரகாஷ் கூறியுள்ளார். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலை படாமல் தனக்காக இருவர் கட்டிப் புரண்டு சண்டை போட்டதை நடிகை ராகினி வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளார்.

நடிகை ராகினி தமிழில் சசிக்குமாருடன் பிரம்மன் படத்தில் நடித்துள்ளார்.