விஜய் டிவி! ஜீ தமிழ்! சன் டிவிக்கு இளையராஜா வைத்த ஆப்பு!

இசை போட்டி நடத்துவதாகக் கூறி இனி எந்த தொலைக்காட்சியும் இளையராஜாவின் பாடலை பயன்படுத்த முடியாது.


ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா தன்னுடைய பாடல்களை தனது அனுமதி இல்லாமல் இசைக் கச்சேரிகள், மேடை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சிகளில் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இளையராஜாவின் பாடலை அவரது அனுமதி இல்லாமல் வணிக ரீதியாக யாரும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக இசைக்கச்சேரிகள், மேடை இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி போட்டிகள் என எதிலும் இளையராஜாவின் பாடலை அவரது அனுமதி இல்லாமல் பாடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக செல்போன் நிறுவனங்கள் காலர் ட்யூன்கள் கூட இளையராஜா பாடல் அவரது அனுமதி பெற்று தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

அந்த வகையில் இளையராஜாவிடம் அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டிய பாடலுக்கு உரிய தொகையை செலுத்தி தான் பாடல்களை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டிகளில் கூட இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், ஜூனியர் சிங்கர், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகம ஆகிய நிகழ்ச்சிகளில் இளையராஜாவின் பாடலை பாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படிப் பாட வேண்டும் என்றாலும் இளையராஜாவை சந்தித்து அதற்குரிய தொகையை கொடுத்து அனுமதி பெற்று வாழ முடியும்.