போதும் நிறுத்திக் கொள்ளலாம் என்ற கள்ளக்காதலி! ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த கொடூரம்!

கள்ளக் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று கூறிய பெண் கள்ளக்காதலனால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொடி பவுனு. கணவனை இழந்த இவர் வயதுக்கு வந்த இரு மகள்களுடன் வசித்து வந்தார். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த இவருக்கும் குமாரமங்கலம் காலனியைச் சேர்ந்த ராமு என்ற லட்சுமணனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. கொடி பவுன் வீட்டிற்கு ராமு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த கொடி பவுனுவின் உறவினர்கள் அவரை கண்டித்து உள்ளனர். இதையடுத்து குமாரமங்கலம் சென்ற கொடி பவுன், ராமுவை சந்தித்து இனிமேல் தனது வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கொடி பவுனு வை ராமு தாக்கியுள்ளார்.

அழுதுகொண்டே வீட்டுக்கு சென்ற அவரை ராமு சமாதானம் செய்யச் சென்றபோது பிரச்சனை பெரிதானது. மீண்டும் மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே கொடி பவுனுவை ராமு சரமாரியாக வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த அந்தப் பெண்ணின் தாயார் ராசாத்திக்கும் வெட்டு இந்தக் கொடூர தாக்குதலால் கொடி பவுன் உயிரிழந்து விடவே ராமு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.

இந்தநிலையில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராமுவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கொலைச் சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொடி பவுனு வை விட ராமு எட்டு வயது குறைந்தவர். கள்ளக்காதலால் நேர்ந்த இந்தப் படுகொலை உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.